வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

2 மனைவி இருந்தாலும் ஸ்ரீபிரியா பின்னால் சுற்றிய பிரபல நடிகர்.. கடைசியில் அம்போன்னு விட்டுப் போன பரிதாபம்

அந்த காலத்தில் மிகவும் துணிச்சலாகவும், தைரியமாகவும் இருக்கக்கூடிய நடிகை ஸ்ரீபிரியா. இவர் தனது மனதில் பட்டதை யார் எதிரே இருந்தாலும் அப்படியே சொல்லக்கூடியவர். இவர் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், சிவக்குமார் போன்ற நடிகர்களின் படங்கள் நடித்துள்ளார்.

மேலும் ஸ்ரீபிரியா 350 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதில் இவருடைய சிறந்த நடிப்புக்காக பல விருதுகளை வாங்கியுள்ளார். இந்நிலையில் தன்னுடன் நான்கு வயது இளமையான ஒரு நடிகரை காதலித்த ஸ்ரீபிரியா ஏமாந்து உள்ளார். அந்த நடிகரின் தந்தையும் சினிமாவில் உள்ளவர் தான்.

Also Read :5 ரூபாய் சம்பளத்தில் நடித்த ஜெய்சங்கர்.. அதே படத்தில் ஸ்ரீபிரியா சம்பளத்தை கேட்டா அதிர்ச்சி ஆயிடுவீங்க

அதாவது நடிகர் முத்துராமனுக்கு ஜோடியாக ஸ்ரீப்ரியா நடித்துள்ளார். அவரது மகன் கார்த்திக் ஸ்ரீபிரியாவுடன் நினைவுகள், நட்பு, காளிச்சரண் போன்ற படங்களில் நடித்துள்ளார். ஸ்ரீப்ரியாவின் அழகில் மயங்கி நவரச நாயகன் கார்த்திக் அவரின் பின்னால் சுற்றியுள்ளார்.

கார்த்தியின் காதலை ஏற்க மறுத்த ஸ்ரீபிரியா அதன்பின்பு காதலில் விழுந்தார். ஆனால் கார்த்திக் ராகினி என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து அவரது தங்கையையும் கார்த்திக் மணமுடித்துக் கொண்டார். இரண்டு மனைவிகள் இருந்தும் ஸ்ரீ பிரியா மீதும் கார்த்திக் காதலில் தான் இருந்தார்.

Also Read :நல்ல வாய்ப்பு கிடைத்தும் கௌதம் கார்த்திக்கு ஓடாத 5 படங்கள்.. அப்பா அளவிற்கு வளர முடியாமல் போன துரதிர்ஷ்டம்

ஒரு கட்டத்தில் ஸ்ரீபிரியாவை கார்த்திக் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டார். அப்போது ஸ்ரீபிரியாவுக்கு அந்த அளவுக்கு அங்கீகாரம் இல்லாததால் இவரால் எதுவும் செய்ய முடியாமல் போனது. இதனால் கார்த்திக்கை எதிர்த்து ஸ்ரீபிரியா சவால் விட்டிருந்தார்.

அதாவது நீ ஒரு பெரிய நடிகனாக இருந்ததால் என்னை ஏமாற்றி விட்டாய், ஆனால் நான் ஒரு சிறந்த நடிகை என்ற பெயரை வாங்கி, உன்னை விட பெரிய நடிகரை திருமணம் செய்து கொள்வேன் என கூறியிருந்தார். அதேபோல் ராஜ்குமார் என்ற நடிகரை இவர் திருமணம் செய்து கொண்டார். இந்த தகவல் முழுக்க முழுக்க பயில்வான் சொன்னது. இதில் எந்த அளவுக்கு உண்மை தன்மை உள்ளது என்பது தெரியவில்லை.

Also Read :நவரசநாயகன் இளசுகளை கவர்ந்த 5 காதல் படங்கள்.. பத்து நிமிஷத்துல பட்டையை கிளப்பிய கார்த்திக்

Trending News