வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

Hotspot Movie Review- பணத்துக்காக உடலை விற்கும் ஆண்.. வித்தியாசமான முயற்சியில் ஹாட் ஸ்பாட், முழு விமர்சனம்

Hotspot Movie Review: வித்யாசமான கதைகளை இயக்குவதில் தான் இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி ஒரு முயற்சியில் சர்ச்சையை கிளப்பி இருக்கும் படம் தான் ஹாட்ஸ்பாட்.

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், ஜனனி, அம்மு அபிராமி என பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். 4 குறும்படங்களாக இணைந்திருக்கும் இதன் விமர்சனத்தை இங்கு காணோம்.

ஹாப்பி மேரிட் லைஃப்

தயாரிப்பாளரிடம் கதை சொல்ல போகும் இயக்குனரின் பார்வையில் இப்படம் இருக்கிறது. அதில் முதல் கதை கணவன் மனைவி ரோல்கள் மாறினால் எப்படி இருக்கும் என்பதை சொல்கிறது.

நிஜத்தில் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை அலசுகிறது இந்த குறும்படம். இதில் சில இடங்களில் ஓவர் ஆக்டிங் தெரிஞ்சாலும் ரகளையும் நையாண்டியும் கலந்து இருக்கிறது.

கோல்டன் ரூல்ஸ்

சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி இருவரும் காதலிக்கிறார்கள். இந்த காதலுக்கு சம்மதமும் கிடைத்து விடும் நேரத்தில் இருவரும் அண்ணன் தங்கை உறவு என தெரிய வருகிறது.

அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் இந்த குறும்படத்தின் கதை. இதில் அம்மு அபிராமியின் நடிப்பு குறை சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது.

தக்காளி சட்னி

இந்த கதையில் ஜனனி, சுபாஷ் இருவரும் காதலர்கள். ஐடி துறையில் பணி புரியும் சுபாஷிற்கு ஒரு பிரச்சனையின் காரணமாக வேலை போய் விடுகிறது.

அதையடுத்து அவர் பணத்திற்காக உடலை விற்கும் தொழிலில் ஈடுபடுகிறார். இதனால் அவர் சந்திக்கும் பிரச்சனை என்ன என்பதை இந்த குறும்படம் சொல்கிறது.

ஃபேம் குறும்படம்

இதில் கலையரசன், சோபியா ஆகியோரின் குழந்தைகள் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்கின்றனர். அதனால் ஏற்படும் விளைவுகளையும் பாதிப்புகளையும் இயக்குனர் காட்டியிருக்கிறார்.

இன்றைய காலகட்டத்தில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. குழந்தைகளை வைத்து பணம், புகழ் தேடும் பெற்றோர்களின் முகத்திரையை தோலுரித்து காட்டியுள்ளனர்.

இப்படி இந்த நான்கு கதைகளில் முதல் மூன்று கொஞ்சம் நக்கலும் கருத்தும் கலந்திருக்கிறது. ஆனால் நான்காவது கதை கொஞ்சம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்படியாக சொல்ல வந்ததை தெளிவாக சொல்லியிருக்கும் இயக்குனர் கருத்து கந்தசாமி ஆகவும் மாறி இருக்கிறார். பல இடங்களில் அதிகப்படியாக கிளாஸ் எடுத்திருப்பது போன்ற உணர்வு வருகிறது.

மேலும் சில முகம் சுளிக்கும் காட்சிகளும் இருப்பதால் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் வித்தியாசமான முயற்சியை விரும்புபவர்கள் ஒரு முறை பார்க்கலாம்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 2.5/5

 

Trending News