வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தனுஷ் லயன் அப்பில் இருக்கும் 8 படங்கள்.. ஆல் ரவுண்டராக சுற்றும் அசுரன்

Dhanush Lineup Movies: தனுசுக்கு சமீபகாலமாக படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் அவரது மார்க்கெட்டு குறைந்தபாடு இல்லை. அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இப்போது தனுஷ் கைவசம் கிட்டத்தட்ட 8 படங்களை வைத்திருக்கிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, பாலிவுட் பட வாய்ப்புகளும் தனுஷ் இடம் இருக்கிறது.

அதன்படி அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக தனுஷின் ஐம்பதாவது படத்தை அவரே இயக்க இருக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

Also Read : அப்ப அந்த கெட்டப் கேப்டன் மில்லருக்கு இல்லையா.? 3ம் முறையாக பாலிவுட் இயக்குனருடன் மிரட்ட வரும் தனுஷ் வீடியோ

இதைத்தொடர்ந்து ஆனந்த் எல் ராயுடன் தேரே இஷ்கு மெயின் என்ற படத்தில் பணியாற்ற உள்ளார். ஏற்கனவே இதே இயக்குனருடன் ராஞ்சனா என்ற படத்தில் தனுஷ் வேலை பார்த்து உள்ளார். இதன் மூலம் மீண்டும் பாலிவுட்டில் தனது பயணத்தை தொடங்குகிறார். இதைத்தொடர்ந்து நான்காவது சேகர் கம்முலா உடன் தனுஷ் கைகோர்க்க இருக்கிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக இருக்கிறது. இப்போது உதயநிதியின் மாமன்னன் படத்தை இயக்கி உள்ள மாரி செல்வராஜுடன் தனுஷ் ஒரு படம் பண்ணுகிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான கர்ணன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read : கலவரம் செஞ்சு வெற்றி பெற்ற 5 படங்கள்.. முதல் படத்திலேயே பூகம்பமான தனுஷ்

மேலும் தனுஷின் ஆஸ்தான இயக்குனரான வெற்றிமாறனுடன் புதிய படம் ஒன்றில் தனுஷ் இணைகிறார். விடுதலை 2 மற்றும் வாடிவாசல் படத்தை முடித்த கையுடன் தனுஷ் படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக எச். வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம்.

மேலும் கடைசியாக ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பான படம் என்றால் தி கிரே மேன் 2 தான். ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் இரண்டாவது பாகம் உருவாக இருக்கிறது. இதில் தனுஷ் வில்லனாக மிரட்ட இருக்கிறார். இவ்வாறு 8 படங்கள் தனுசுக்கு வரிசை கட்டி நிற்கிறது.

Also Read : D50 படத்திற்கு கொழுக்கு மொழுக்கு நடிகையை லாக் செய்த தனுஷ்.. திரிஷா, கங்கனாவை ஓரம் கட்டிய ஹீரோயின்

Trending News