தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இசையின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர் தேவா. ஆனால் சினிமாவில் நுழைவதற்கும் இவர் பட்ட கஷ்டத்திற்கு எல்லையே இல்லை என கூறியுள்ளார்.
தேவா சில காலங்களுக்கு முன்பு அத்தான், செல்ல குயில், நரி மற்றும் பூமரத்து பூங்குயில்கள் போன்ற 13 படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால் இது வரைக்கும் எந்த ஒரு திரைப்படமே வெளியாகவில்லை என மன வருத்தத்தில் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் ஒரு சிலர்கள் உனக்கு ராசி இல்லை, அதனால் தான் நீ இசையமைக்கும் பாடல்கள் மற்றும் படங்கள் எதுவுமே வெளியாகவில்லை என்று கூறியுள்ளனர். அதனால் உனது பெயரை மாற்றி வைத்து பார் என தெரிவித்துள்ளனர், தேவா இவர்கள் பேச்சை கேட்டு நாடோடி சித்தன், மனோரஞ்சன் எனவும் பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.
மேலும் தனக்கு வாழ்க்கை கொடுத்தவரே ராமராஜன் என்று பல மேடைகளில் வெளிபடையாக கூறியுள்ளார். அதாவது ராமராஜன் படத்தில் இவர் பல பாடல்கள் பாடி ஹிட் அடித்ததால் சினிமாவில் தனக்கென ஒரு அங்கிகாரம் கிடைத்தது.
அதுமட்டுமில்லாமல் தேவாவிற்கு ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ என்ற பாடல் மிகவும் பிடித்த பாடலாகவும், மேலும் வாழ்க்கையில் வழிகாட்டி என்றால் எம்எஸ்வி என கூறியுள்ளார்.
கவிஞர் கண்ணதாசன் மற்றும் எம்ஜிஆர் இவர்களுடன் இன்னும் பணியாற்றவில்லை என்பது வருத்தம் தான். இப்படி தமிழ் சினிமாவில் அங்கீகாரம் கிடைப்பதற்கு பல போராட்டங்களை சந்தித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.