digangana suryavanshi – மும்பையைச் சேர்ந்த திகங்கனா சூர்யவர்ஷினி இந்திய நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வருகிறார். தொலைக்காட்சியின் தன் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், ஸ்டார் பிஸ்ஸ் தொலைக்காட்சியில் வேக் வீர் கி அர்தாஸ் தொடரில் நடித்தது திருப்புமுனை ஆனது.

சகுந்தலா, கிருஷ்ணா அர்ஜூன், ருக் ஜானா நஹின் தொடர்களிலும் நடித்திருந்தார். சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 9 சீசனில் 17 வயதில் இவர் போட்டியாளராக இருந்தார்.

2018 ல் ஃப்ரைடே என்ற படம் மூலம் நடிகையாக பாலிவுட்டில் எண்ட்ரி ஆனார்.

தெலுங்கில் ஹிப்பி என்ற பத்திலும், தமிழில் தனுஷி ராசி நேயர்களே படத்திலும் நடித்துள்ளார்.

இவரது ரீசண்ட் போட்டோ ஷீட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.