புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அதிரடியாக ஆரம்பமாகும் தேவர் மகன் 2.. விக்ரம் பட வில்லன்களை களமிறக்கும் ஆண்டவர்

லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் தற்போது ரசிகர்களின் அமோக வரவேற்புடன் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இதனால் தயாரிப்பாளரான கமல் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். அதே சந்தோசத்துடன் தற்போது அவர் தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை ஆரம்பிக்க இருக்கிறார்.

பரதன் இயக்கத்தில் கடந்த 1992ம் ஆண்டு சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரேவதி, கௌதமி, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தேவர்மகன். 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த இந்த திரைப்படம் ஏராளமான விருதுகளையும் வாங்கிக் குவித்தது.

அந்த வகையில் இப்படம் கமல் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் முக்கிய இடத்தையும் பெற்றுள்ளது. அதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று கமல் ரசிகர்கள் உட்பட பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் கடந்த வருடமே இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கப்படும் என்ற ஒரு தகவல் வெளிவந்தது.

ஆனால் இடையில் அது பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது இப்படம் மீண்டும் ஆரம்பிக்கப் போகிறது என்ற சந்தோசமான தகவல் கிடைத்துள்ளது. அதன்படி இதில் விக்ரம் படத்தில் வில்லன்களாக கலக்கிய சூர்யா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய சூர்யா அல்லது விஜய் சேதுபதி இப்படத்தில் கமலுக்கு மகனாக நடிக்கலாம் என்ற ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. இப்போது பல திரைப்படங்களில் சூர்யா பிஸியாக நடித்து வந்தாலும் கமலுக்காக அவர் இந்த கதாபாத்திரத்தை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தேவர் மகன் திரைப்படத்தில் கமலுக்கு வில்லனாக நாசர் நடித்திருந்தார். தற்போது இந்த இரண்டாம் பாகத்தில் அவருக்கு மகனாக பகத் பாசில் நடிக்க இருக்கிறார். இதனால் இந்த படத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். விக்ரம் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை போல் இந்த படத்திற்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News