சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

தேவயானியை துரத்தி துரத்தி காதலித்த மூத்த நடிகர்.. கல்யாணமாகியும் விடாத கொடுமை!

ஒரு காலத்தில் முன்னணி நடிகையாகவும் அதே நேரத்தில் அவ்வப்போது குட்டிக்குட்டி கவர்ச்சி வேடங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகை தான் தேவயானி.

அன்றைய காலகட்டங்களில் அதிக ரசிகர் பட்டாளங்களை கொண்ட நடிகையாகவும் வலம் வந்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நடித்து அங்கேயும் வெற்றிக்கொடி நாட்டிய நடிகை.

பார்ப்பதற்கு இன்னமும் பச்சை குழந்தை போல் இருக்கும் தேவையானி அப்போது எப்படி இருந்தார் என்று சொல்லவா வேண்டும். அழகு தேவதையாக வலம் வந்தவரை எப்படியாவது ஆட்டையை போட்டு விட வேண்டும் என கல்யாணமான நடிகர் ஒருவர் அவரை சுற்றி சுற்றி வந்தாராம்.

devayani-cinemapettai
devayani-cinemapettai

தேவயானி உச்ச கட்டத்தில் இருந்த நேரம் அது. அப்போதுதான் நடிகர் சரத்குமாருக்கு தேவயானி மீது காதல் வந்துள்ளது. பாட்டாளி படத்தில் நடித்த போது கொஞ்சம் நெருக்கம் ஏற்பட்டதாக கூறுகின்றனர்.

இதனால் தேவயானியை மறக்க முடியாமல் தவித்த சரத்குமார் எப்படியாவது அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தேவயானியின் தாயாரிடம் பெண் கேட்டுச் சென்று விட்டாராம். அப்போது சரத்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தன.

sarathkumar-devayani-cinemapettai
sarathkumar-devayani-cinemapettai

ஏற்கனவே திருமணமான உங்களுக்கு எப்படி என்னுடைய பெண்ணைக் கட்டித் தருவது எனவும், அவர் இன்னும் சினிமாவில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்று கூறி சரத்குமாரின் ஆசைக்கு முட்டுக்கட்டை போட்டு விட்டாராம் தேவயானியின் தாயார். இந்த தகவலை நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு யூடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Trending News