வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அட ஆறடி வளர்ந்த நடிகர் கூட ஐட்டம் டான்ஸ் ஆடிய தேவயானி.. எந்த படம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் குடும்ப கதையில் மட்டும் நடித்துக் கொண்டிருந்தவர்தான் தேவயானி. அதன் பிறகு வாய்ப்புகள் குறைந்ததால் கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்தார்.

அதுவும் அவருக்கு சரியாக அமையாததால் பின்பு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார். அது என்ன படம் எந்த பாடல் எந்த நடிகருடன் என்பதை தற்போது பார்ப்போம்.

அதாவது தேவயானி என்றாலே குடும்பப்பாங்கான முகம், உடை என்பதுதான் அனைவரது நினைவிலும்யிருக்கும். அதுமட்டுமில்லாமல் நீச்சல் உடையில் அல்லது டூ பீஸ் உடையில் அவங்களை நிஜ வாழ்க்கையில் ரசிகர்களால் கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாது.

ஆனால் சினிமாவில் அப்படியே அதற்கு நேர்மாறாக ஒரு சில படங்கள் நடித்துள்ளார். அதாவது தொட்டாசினிங்கி படத்தில் ரகுவரன் தங்கச்சியாக கிளாமர் ரோல் பண்ணியிருப்பார்.

அதன்பிறகு கல்லூரி வாசல் படத்தில் இன்னும் படுகவர்ச்சியாக நடித்திருப்பார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சிவசக்தி படத்தில் பிரபு மற்றும் சத்யராஜ் நடித்துள்ளனர்.

இப்படத்தில் சத்யராஜ் உடன் தேவயானி ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருப்பார். இது பலருக்கும் தெரியாது. ஆனால் சினிமாவை பொருத்தவரை பல நடிகைகள் படுகவர்ச்சியாக நடித்துள்ளனர். அதுபோலதான் தேவயானியும் ஒரு சில படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார்.

ஆனால் காதல் கோட்டை படம் வெளி வந்த பிறகு தேவயானி சினிமா வாழ்க்கை அப்படியே மாறியது. தற்போது கூட ஒரு சில சீரியல்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் நடித்து வருகிறார்.

Trending News