தேவயானி – சினிமாவைப் பொருத்தவரை பல நடிகைகளும் ஆரம்ப காலத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தனர். அப்படி ஒரு காலத்தில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தவர்தான் தேவயானி.
ஆரம்ப காலத்தில் தேவயானிக்கு சரியான பட வாய்ப்புகள் வராததால் சத்யராஜுடன் சிவசக்தி படத்தில் கிளாமரான பாட்டுக்கு நடனம் ஆடியிருப்பார். அதன்பிறகுதான் இவருக்கு காதல்கோட்டை படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து தேவயானி தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கனவுக்கன்னியாக அனைத்து ரசிகர்கள் மனதிலும் குடியேறினார். தற்போது தேவயானி சினிமாவில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் வராததால் சின்னத்திரையில் கவனம் செலுத்தி ஒரு சில சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பல வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் தேவயாணி ஒரு படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு திரும்பியுள்ளார். அதாவது கன்னடத் திரையுலகில் வெளியாக உள்ள மதகஜ எனும் படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அந்த புகைப்படத்தை பார்க்கும் போது ஒரு சில ரசிகர்கள் சூரிய வம்சத்தில் நடித்திருக்கும் ராதாவின் தோற்றத்தைப் போலவே உள்ளது என கூறி வருகின்றனர். ஆனால் தேவயானியின் வயதான தோற்றத்தில் உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.