புது அவதாரம் எடுக்கும் தேவயானி.. பிள்ளையார் சுழி போட்ட இளையராஜா

Devayani: 90 காலகட்டத்தில் தன்னுடைய ஹோம்லியான நடிப்பின் மூலம் இன்றும் ரசிகர்களின் மனதில் இருக்கிறார் தேவயானி. கை நிறைய படங்களை வைத்துக்கொண்டு பிஸியாக நடித்த போதே காதல் திருமணம் செய்து ஆச்சரியப்படுத்தியவர்.

அந்த திருமணம் அவருடைய கேரியருக்கு சிறு சறுக்கலை கொடுத்த போதிலும் காதல் முக்கியம் என அவர் போராடியது பலரையும் வியக்க வைத்தது. இப்போதும் கூட சிறந்த நட்சத்திர தம்பதிகளில் இந்த ஜோடியும் ஒருவராக இருக்கின்றனர்.

தற்போது ஜெயம் ரவியின் ஜீனி படத்தில் இவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அது மட்டும் இன்றி சின்னத்திரையிலும் கோலங்கள் உட்பட பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.

இப்படி மவுசு குறையாமல் இருக்கும் இவர் தற்போது புது அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். ஏற்கனவே தயாரிப்பாளராக இருக்கும் இவர் தற்போது இயக்குனராக மாறியிருக்கிறார். ஆம் அவர் தற்போது ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார்.

இயக்குனராகும் தேவயானி

அதற்கு இளையராஜா இசையமைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் இது போன்ற குறும்படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க கேட்பதற்கு பலரும் தயங்குவார்கள்.

ஆனால் தேவயானி அதையெல்லாம் ஓரம் கட்டி தைரியமாக அவரிடம் இது குறித்து கேட்டிருக்கிறார். உடனே இசைஞானியும் அதற்கு என்ன தாராளமா பண்ணலாம் என இசையமைத்து கொடுத்து விட்டாராம். இதற்காக அவர் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கியது தனி கதை.

ஆனால் குறும்படம் தானே என்று மறுக்காமல் அவர் இசையமைத்தது பாராட்டப்பட்டு வருகிறது. முன்னதாக சுகாசினி குறும்படம் இயக்கிய போது கூட இளையராஜா இசையமைத்தது குறிப்பிடத்தக்கது. நடிகை தயாரிப்பாளர் என்பதை தாண்டி இயக்குனராகியுள்ள தேவயானிக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என பார்ப்போம்.

Leave a Comment