ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அனிருத்தை ஓரம் கட்டிய தேவிஸ்ரீ பிரசாத்.. கைவசம் இருக்கும் டாப் 4 படங்கள்

Devi Sri Prasad : தேவிஸ்ரீ பிரசாத் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் படங்களை கைவசம் வைத்திருந்தார். ஆனால் அதன் பிறகு அனிருத் ஹிட் பாடல்களை கொடுக்க தொடங்கிய நிலையில் அவரை தான் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் புக் செய்ய ஆரம்பித்தனர்.

ஆகையால் மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி வந்த தேவி ஸ்ரீ பிரசாத் மீண்டும் 6 வருடத்திற்கு பிறகு தரமான கம்பேக் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் டாப் 4 பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அந்த படங்களின் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சூர்யாவின் கங்குவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் சூர்யா நடித்து வருகிறார். 3d அனிமேஷனில் உருவாகி வரும் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதுவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் தான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

ஏற்கனவே சூர்யாவுக்கு சிங்கம் படத்தில் மாஸ் ஹிட் பாடல்களை இவர் கொடுத்துள்ளார். ஆகையால் மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளதால் கங்குவா படத்தில் தரமான பாடல்களை டிஎஸ்பி கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.

தனுஷின் குபேரா

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி, நடித்து வரும் படம் தான் குபேரா. இந்த படத்தில் எக்கச்சக்க திரை பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பொதுவாக தனுஷின் படங்களில் அனிருத் தான் இசையமைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தனுஷின் குட்டி, வேங்கை ஆகிய படத்திற்கு பிறகு இப்போது குபேரா படத்தில் இணைந்துள்ளார். அடுத்ததாக விஷாலின் நடிப்பில் ரத்னம் படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ஹரி இயக்கி வரும் இந்த படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைக்கிறார்.

அஜித்தின் குட் பேட் அக்லி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள குட் பேட் அக்லி போஸ்டர் நேற்றைய தினம் வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் தான் மியூசிக் டைரக்டராக பணியாற்ற இருக்கிறார். இதற்கு முன்னதாக அஜித்தின் வீரம் படத்திற்கும் இவர்தான் இசையமைத்து இருந்தார்.

Trending News