குட் பேட் அக்லி படம் 2025 ஜனவரி 10ஆம் தேதி பொங்கலுக்கு வெளியிட திட்டம் போட்டிருக்கிறார்கள். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் அவர் தந்தை வலது கரம் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் சூட்டிங் நடைபெற்றாலும் மறுபக்கம் இதன் டப்பிங் வேலைகளை பார்த்து வருகிறார்கள்.
இன்னும் ஒரு மாத காலம் தான் இருக்கிறது அதற்குள் ஷூட்டிங் முழுவதுமாக முடித்துவிட்டு போஸ்ட் ப்ரோடுக்க்ஷன் வேலைகளை பார்க்க வேண்டும், இதற்காக மொபைல் டப்பிங் வசதிகள் கூட பார்த்து விட்டனர். இப்பொழுது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பெரிய தலைவலியாக இருப்பது படத்தின் மியூசிக் டைரக்டர் தேவி ஸ்ரீ பிரசாத் தான்.
சொன்ன நேரத்துக்குள் பாட்டுகளை ரெடி பண்ணி கொடுப்பதில் மிகவும் மெத்தனமாக செயல்படுகிறாராம். இதனால் இந்த படத்திலிருந்து அவரை தூக்கிவிட்டு ஜிவி பிரகாஷை பயன்படுத்துகின்றனர். அவர் ஒரு வாரத்துக்குள் மூன்று பாட்டுகள் கொடுத்து விடுகிறேன் என கூறிவிட்டாராம்.
ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்திற்கு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ஜி வி பிரகாஷ் தான் வேண்டுமென்று கூறி வந்தாராம். திரிஷா இல்லனா நயன்தாரா படத்திலிருந்து இவர்கள் கூட்டணி தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அஜித் தான் தேவி ஸ்ரீ பிரசாத் வேண்டும் என்று கூறிவிட்டாராம்.
இதற்கு முன்னர் அஜித்துடன் வீரம் படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் பணியாற்றியுள்ளார். அவர் அஜித்திடம் வாய்ப்பு கேட்டதாக தெரிகிறது. அதனால் தான் அஜித் இந்த படத்திற்கு டிஎஸ்பிஐ சிபாரிசு செய்துள்ளார். ஆனால் அவரால் உரிய நேரத்தில் படத்திற்கு பாட்டு அமைக்க முடியவில்லை. இதனால் தான் இப்பொழுது ஜிவி பிரகாஷ் உள்ளே வந்து விட்டார்.