வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

Devil Movie Review – பயமுறுத்தியதா டெவில், இசையமைப்பாளராக ஜெயித்தாரா மிஸ்கின்?. முழு விமர்சனம் இதோ!

Devil Movie Review : இயக்குனர் மிஷ்கின் டெவில் படத்தின் மூலம் முதல் முதலாக இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். அவரது தம்பி ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விதார்த், பூர்ணா, திரிகுன் மற்றும் சுபஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் நால்வரை வைத்தே படம் நகர்கிறது.

அதாவது டெவில் என்றவுடன் எல்லோருக்கும் இது பேய் படமா என்ற எண்ணம் தான் வரும். ஆனால் மனிதர்களிடம் இருக்கும் தீய எண்ணங்களை வைத்து தான் படத்தின் டைட்டிலை குறிப்பிட்டுள்ளனர். ஏதாவது வக்கீல் வேலை பார்க்கும் விதார்த் பெற்றோர்களின் கட்டாயத்தால் பூர்ணாவை திருமணம் செய்து கொள்கிறார்.

ஆனால் விதார்த் மற்றும் பூர்ணா இடையே ஒரு சமூகமான உறவு ஏற்படவில்லை. பூர்ணா எவ்வளவு தான் விதார்த்தை நெருங்கி வந்தாலும் அவர் விலகி செல்கிறார். இந்நிலையில் ஒரு விபத்தின் காரணமாக பூர்ணா திரிகுனை சந்திக்கிறார். நண்பர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட அது காதலாக மாறுகிறது.

Also Read : விஷாலை மிஸ் செய்யும் மிஷ்கின்.. துரோகத்திற்கு பழியாக பக்காவாக போட்ட பிளான்

அதேபோல் விதார்த் சுபஸ்ரீ உடன் காதலில் விழுகிறார். இந்நிலையில் பூர்ணா திரிகுன் உடன் காதல் கொள்வதை விதார்த் கண்டுபிடித்து விட்டார். அதேபோல் விதார்த் சுபஸ்ரீ உடன் பழகுவதும் பூர்ணாவுக்கு தெரிந்து விட்டது. இதனால் இவர்களுக்குள் என்ன பிரச்சனை ஏற்படுகிறது என்பதுதான் டெவில்.

படத்திற்கு பிளஸ் என்றால் பூர்ணா தான். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சரியாக நடித்து இருக்கிறார். மிஸ்கினும் முதல் படத்திலேயே இசையமைப்பாளராக பட்டையை கிளப்பு இருக்கிறார். படத்தில் இடம்பெற்ற பாடல் மற்றும் பின்னணி இசை பக்கபலமாக அமைந்திருக்கிறது.

படத்திற்கு மைனஸ் என்றால் முதல் பாதியில் உள்ள விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை. தேவையில்லாமல் ரசிகர்களை திகில் அடையச் செய்ய வேண்டும் சில காட்சிகள் வலுக்கட்டாயமாக வைக்கப்பட்டுள்ளதாக எண்ணம் தோன்றுகிறது. ஆனாலும் கிளைமாக்ஸ் காட்சி எதிர்பார்க்காத வண்ணம் அமைந்திருக்கிறது.

சினிமாபேட்டை ரேட்டிங் : 2.5/5

Also Read : 34 வயது நடிகையின் வயிற்றில் பிறக்க ஆசைப்படும் மிஸ்கின்.. இதற்குப் பின்னால் இப்படி ஒரு காரணமா?

Trending News