தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடியில் கலக்கிக் கொண்டிருந்தவர். இவர் படங்களில் அனைத்தும் வித்தியாச வித்தியாசமான காமெடிகள் செய்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
தொடர்ந்து சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வந்த தாமு அதன் பிறகு சமூக அக்கறை மீதும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதாவது ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக முழு முயற்சியில் ஈடுபட்டார்.
கடந்த பத்தாண்டுகள் கல்வி சேவைக்காக பாடுபட்ட தாமுவிற்கு “ராஷ்டிரிய சிக்ஷா கௌரவ புரஸ்கார்” தேசிய கல்வியாளர்கள்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பல தொழிலதிபர்கள் மற்றும் விஐபிகள் முன்னிலையில் நடிகர் தாமுவுக்கு இவ்விருதினை அளித்து கவுரவித்தனர்.
மேலும் முன்னாள் ஜனாதிபதியான ஏபிஜே அப்துல் கலாமின் ஆலோசனையின் பெயரில் நடிகர் தாமு 2011 முதல் 2016ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் ஏபிஜே அப்துல் கலாமின் அறிவுறுத்தலின் பெயரில் முதல் சர்வதேச ஆசிரியர் மாணவர் பேரவையைத் தொடங்கினார்.
இந்தப் பேரவையின் மூலம் ஏழை மாணவர்களின் கல்வி நலனுக்காக நடிகர் தாமு தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் ஒரு லட்சம் பேராசிரியர்கள் உடன் 30 லட்சம் பெற்றோர்கள் கொண்ட இந்த அமைப்பின் மூலம் 20 லட்சம் மாணவர்களை கல்விக்காக உதவி செய்து உள்ளார். இவரது சேவை மற்றும் இதனை கருத்தில் கொண்டு உயரிய விருதான தேசிய கல்வியாளர்களுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் தான் நடிகர் சூர்யாவும் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக அகரம் என்ற பவுண்டேஷன் மூலம் பல மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். தற்போது இந்த வரிசையில் நடிகர் தாமு இடம் பிடித்துள்ளார்.