செவ்வாய்க்கிழமை, மார்ச் 4, 2025

சந்தியா ராகம் சீரியலில் ரகுராமுக்கு செக் வைக்கப் போகும் தனம்.. மாயா போட்ட தூண்டிலில் விழுந்த கார்த்திக்

Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், ரகுராமின் பதவியை பறித்து வீட்டில் டம்மியாக உட்கார வைக்க வேண்டும் என்று புவனேஸ்வரி திட்டம் போட்டார். ஆனால் மாயா, புவனேஸ்வரி போடும் திட்டத்தை புரிந்து கொண்டு பஞ்சாயத்து தலைவராக புவனேஸ்வரி இருக்கக் கூடாது என்று முடிவு பண்ணி விட்டார். அதே நேரத்தில் ரகுராமும் தலைவர் பதவி வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்து விட்டார்.

இதனால் மாயா அதிரடியாக முடிவு எடுத்து ரகுராமின் தம்பி சிவராமனை தலைவர் பதவியில் உட்கார வைத்து புவனேஸ்வரி முகத்தில் கரியை பூசி விட்டார். ஆனாலும் புவனேஸ்வரி இந்த விஷயத்தை அவருக்கு சாதகமாக பயன்படுத்தும் விதமாக பார்வதியிடம் உங்க வீட்டுக்காரர் தலைவர் என்றால் வீட்டில் சாவி கொத்தும் உங்களிடம் தான் இருக்க வேண்டும். அதுதான் உங்களுக்கும் கௌரவம் என்று சொல்லி பார்வதி மனசை கலைத்து வீட்டில் ஜானகி இடம் இருந்து சாவிக்கொத்தை வாங்கிக் கொண்டார்.

தற்போது ரகுராம் வீட்டு தோட்டக்காரர் பையனின் பிறந்த நாளுக்கு ரகுராமிடம் வந்து கலந்து கொள்ளும்படி சொல்லி இருக்கிறார். அதனால் ரகுராம் தோட்டக்காரர் வீட்டிற்கு சீர் செய்யும் விதமாக பார்வதியிடம் பணம் கேட்கிறார். ஆனால் பார்வதி ஊருக்கு எல்லாம் இப்படி வாரி கொடுத்துட்டு போனால் கடைசியில் ஒன்னும் இல்லாமல் தான் நிற்க வேண்டும். அப்படி எல்லாம் நீங்கள் கேட்டபடி நான் பணம் கொடுக்க முடியாது என்று ரகுராமை அவமானப்படுத்தி விட்டார்.

இதனால் நொடிந்து போன ரகுராம் கோவிலில் மன வருத்தத்துடன் இருக்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட புவனேஸ்வரி, ராகுராமை சீண்டிப்பார்க்கும் விதமாக ஃபங்ஷனுக்கு வீசினக்கையும் வெறுங்கையுமாக வந்து அவமானப்பட போகிறாயா என்று அசிங்கப்படுத்திவிட்டார். இதையெல்லாம் பார்த்த மாயா என்னுடைய பெரியப்பா கௌரவத்திற்கு ஒருபோதும் நான் கலங்கத்தை ஏற்படுத்த விரும்ப மாட்டேன்.

இதற்கு இப்பொழுது நான் முடிவு கட்டுகிறேன் என்று சொல்லி ரகுராமிடம் ஏற்கனவே கடனுக்கு பணத்தை வாங்கிய நபரை கண்டுபிடித்து அவர் மூலம் அந்த பணத்தை ரகுராமக்கு திரும்பப் பெறும்படி செய்து விட்டார். அந்த வகையில் ரகுராமுக்கு கிடைத்த பணத்தை வைத்து தோட்டக்காரருக்கு செய்ய வேண்டிய சீர்வரிசையை கௌரவமாக செய்து முடித்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து கார்த்திக்கை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு பண்ணிய மாயா சோசியல் மீடியா மூலம் கார்த்திக்கு தூண்டில் போட்டார். இது மாயா தான் என்று தெரியாத கார்த்திக்கும் மாய போட்ட தூண்டிலில் விழுந்து விட்டார். உடனே மாயா, போலீசுக்கு போன் பண்ணி கார்த்திக் சோசியல் மீடியாவில் ஆன்லைன்தான் இருக்கிறார். அதை டிராக் பண்ணினால் கார்த்திக் எங்கே இருக்கிறார் என்பதை கண்டுபிடித்து விடலாம் என்று பிளான் போட ஆரம்பித்து விட்டார்கள்.

அடுத்ததாக காலில் அடிபட்டு வந்திருக்கும் தனத்திடம் மாயா நீ பெரியப்பா ஆசைப்பட்ட மாதிரி பேட்மிட்டனில் நேஷனல் லெவலில் வின் பண்ணி விடு. அப்போது பெரியப்பா உன் ஆசையை நிறைவேற்றுகிறேன் என்று சொல்லி இருக்கிறார் அந்த சமயத்தில் கதிருடன் சேர்ந்து வாழ்வது தான் என்னுடைய ஆசை என்று சொல்லிவிட்டால் கொடுத்த வாக்கை காப்பாற்றும் விதமாக பெரியப்பா கதிருடன் உன்னை சேர்த்து வைப்பார் என்று ஐடியா கொடுக்கிறார்.

உடனே தனமும் இது நல்ல ஐடியாவாக இருக்கிறது என்று மாயாவிடம் சொல்லி இனி கதிருடன் சேர்ந்து வாழ்வதற்காக நான் அடி ஜெயிக்கிறேன் என்று சபதம் போட்டிருக்கிறார். அந்த வகையில் ஜெயித்த பிறகு ரகுராமுக்கு செக் வைக்கும் விதமாக கதிருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ரகுராமிடம் தனம் கேட்கப் போகிறார்.

Trending News