செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

தனத்துக்கு இப்படி ஒரு நோயா?. அதிர்ச்சியில் உறைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்

Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது முல்லையின் குழந்தையைப் பார்த்த பிறகு அனைவரும் குதூகலமாக இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அனைவரும் ஒன்றாக சேர்வதற்கான நேரம் வந்துவிட்டது. அதனால் கூடிய விரைவில் இந்த நாடகத்திற்கு சுபம் போட்டு விடுவார்கள் என்று நினைத்திருந்தோம்.

ஆனால் அதற்குப் பதிலாக தனத்திற்கு உடல் ரீதியாக ஒரு பிரச்சனையைக் கொண்டு வருகிறார்கள். ரொம்ப நாளாகவே அடிக்கடி தனம் நெஞ்சை பிடித்துக் கொண்டு வலி வந்து கொண்டிருப்பது போல் உணர்ந்து கொண்டிருக்கிறார். ஆனாலும் அதை பெரிதாகப் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்.

Also read: பாண்டியன் ஸ்டோர்ஸில் அப்பாவை கிழித்து தொங்கவிட்ட மருமகள்.. ஊருக்கே விருந்து வைத்த ஜீவா

இப்பொழுது அதனுடைய வலி அதிகரித்ததனால் யாருடைய தயவும் இல்லாமல் தனியாக மருத்துவமனைக்கு சென்று அடிக்கடி நெஞ்சு வலி வருகிறது என்று பிரச்சனையை சொல்கிறார். அதற்காக சில டெஸ்டுகளை எடுத்த பின்பு தான் என்ன பிரச்சனை என்று தெளிவாக சொல்ல முடியும் என்று டாக்டர் கூறிவிடுகிறார்.

இதை கேள்விப்பட்டதும் தனம் வெளியே வந்து கவலையுடன் ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மீனா அவருடைய அம்மாவை கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு வரும் பொழுது தனத்தை பார்த்து விடுகிறார்.

Also read: ஒட்டுமொத்த பழியையும் மூர்த்தி மேல் போடும் விஷப்பூச்சி.. எமோஷனலாக உடைந்து போகும் கதிர்

பிறகு தனியாக இருக்கும் தனத்திடம் வந்து என்னக்கா ஒரு மாதிரி இருக்கீங்க என்ன பிரச்சனை என்று கேட்கிறார். அதற்கு தனம் ஏதோ சமாளித்துவிட்டு கிளம்பி விடுகிறார். பிறகு மீனாக்கு வந்த சந்தேகத்தினால் மருத்துவரிடம் சென்று தன அக்காக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறார். அதற்கு அந்த மருத்துவர் நெஞ்சு வலிக்குது என்று வந்திருக்கிறார். அதற்காக சில டெஸ்ட் எடுப்பதற்கு எழுதிக் கொடுத்திருக்கிறேன்.

அதாவது நெஞ்சில் பெருசாக கட்டி இருக்கிறது அதற்கு டெஸ்ட் எடுத்து பார்த்த பிறகு தான் என்ன பண்ணலாம் என்பதை சொல்ல முடியும் என்கிறார். உடனே மீனா அப்படின்னா என்ன என்று கேட்க அதற்கு மருத்துவர் பிரஸ்ட் கேன்சராக இருக்கலாம் என்று கூறிவிடுகிறார். இதைக் கேட்ட மீனா அதிர்ச்சியாகிறார். தொடர்ந்து இந்த பிரச்சினையில் இருந்து எப்படி சமாளிக்க போகிறார் என்பதை வைத்து கதை நகரப் போகிறது.

Also read: உச்சகட்ட அவமானத்தால் தற்கொலை முயற்சியில் குணசேகரன்.. டபுளா யோசிச்சு ஜனனி வச்சா பாரு ஆப்பு

Trending News