வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

மொட்டை தலை ராயனாக ஜெயித்தாரா தனுஷ்.? காத்தவராயனின் ஆட்டம் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Raayan Movie Review: தனுஷ் இயக்கி நடித்துள்ள அவருடைய ஐம்பதாவது படமான ராயன் இன்று வெளியாகி இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் ராயன் எப்படி இருக்கிறது என்பதை முழு விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம். காத்தவராயனாக வரும் தனுஷ் பெற்றோர்கள் காணாமல் போன நிலையில் தம்பிகள் மற்றும் தங்கையுடன் வேறு ஊருக்கு வருகிறார்.

கதைகளம்

அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறார் செல்வராகவன். அந்த ஏரியாவில் கேங்ஸ்டர் ஆக இருக்கும் சரவணன், எஸ் ஜே சூர்யாவை காலி செய்ய வருகிறார் போலீஸான பிரகாஷ் ராஜ். இதில் தனுஷின் குடும்பம் மாட்டிக் கொள்கிறது. தன் தம்பிக்காக கத்தி எடுக்கும் தனுஷ் குடும்பத்தை காப்பாற்றினாரா? என்பதுதான் படத்தின் கதை.

வழக்கமான ஆக்சன் சென்டிமென்ட் என நாம் பார்த்த கதை தான். ஆனால் அதை ஆக்சன் என்ற ஒரு விஷயத்தை மட்டுமே வைத்துக்கொண்டு நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் தனுஷ். முதல் பாதி இயல்பாக சென்ற நிலையில் இடைவேளையில் காத்தவராயனின் ஆட்டம் ஆரம்பிக்கிறது.

நிறை, குறைகள்

அதன் பிறகு மூச்சு விடாமல் ஒவ்வொருவரையும் போட்டுத் தள்ளுகிறார் தனுஷ். இதனால் ஒரு குழப்பமும் படம் எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போகிறது என்ற எண்ணமும் வருகிறது. அதே போல் சில காட்சிகள் யூகிக்கும்படியாகவும் உள்ளது.

ஆனால் அதையெல்லாம் தாண்டி செல்வராகவன், எஸ் ஜே சூர்யா என ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்தை தாங்கி நிற்கின்றனர். நான்தான் இயக்குனர் நான்தான் ஹீரோ என யோசிக்காமல் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் தனுஷ்.

அதிலும் இரண்டாம் பாதியில் அவரை மிஞ்சும் அளவுக்கு இருக்கிறது துஷாராவின் கதாபாத்திரமும் நடிப்பும். அவ்வப்போது எதற்கு தேவையில்லாமல் இவ்வளவு சண்டை ரத்தம் என நாம் யோசிக்கும்போது ஏ ஆர் ரகுமானின் இசை அதை மறக்கடிக்க செய்து விடுகிறது இதை சரியாக உபயோகப்படுத்தி இருக்கிறார் தனுஷ்.

ஆனாலும் ஒரு கட்டத்திற்கு மேல் வரும் சலிப்பு இறுதியில் வரும் அடங்காத அசுரன் பாடலால் புத்துணர்ச்சி அடைய வைத்து விடுகிறது. அந்த ஒரு பாடலே படத்திற்கு யானை பலம் போல் இருக்கிறது.
இதற்காக ஏ ஆர் ரகுமானுக்கு ஸ்பெஷல் பாராட்டுகளை கொடுக்கலாம்.

ஆக மொத்தம் மொட்டை தலை ராயனாக படம் முழுக்க வதம் செய்யும் தனுஷ் இயக்குனராக மீண்டும் தன்னை நிரூபித்து இருக்கிறார். சில சில குறைகள் இருந்தாலும் ராயனை தாராளமாக தியேட்டரில் பார்க்கலாம்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 3.25/5

மொட்டை தலை ராவணனாக மாஸ் காட்டும் தனுஷ்

Trending News