வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

விஜய் பட நடிகையை தட்டி தூக்கிய தனுஷ்.. அதிகாரப்பூர்வமாக வெளிவந்த D44 அப்டேட்

தற்போது தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு அதிகமான படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் தனுஷ் தற்போது அவரது 44வது படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன், குட்டி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவாஹர் இயக்குகிறார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

படத்தின் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மற்றபடி படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில், தற்போது D44 படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவித்து வருகிறது.

அதன்படி இன்று காலை படத்தில் இயக்குனர் பாரதி ராஜா, நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்ததாக நித்யா மேனன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

nithya menen
nithya menen

முன்னதாக தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாறன் படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் அடுத்த படத்திற்கும் விஜயுடன் மெர்சல் படத்தில் நடித்த நித்யா மேனனை ஒப்பந்தம் செய்துள்ளார்.

Trending News