தமிழ் சினிமாவில் தற்போது நடிப்பால் பல ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களிலுமே இவரது நடிப்பை பலரும் பாராட்டியுள்ளனர்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ஒரு தரப்பினரை சார்ந்ததாக இருந்தாலும் பிற தரப்பு மக்களால் பார்க்கப்பட்டு படம் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது.
இப்படம் வெளிவந்ததிலிருந்து பலரும் தனுஷை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். தற்போது தனுஷை பாலிவுட்டில் ராஞ்சனா என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி வைத்த ஆனந்த் எல் ராய் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
கர்ணன் திரைப்படம் அமேசான் பிரைம் அனைத்து மொழிகளிலும் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை பார்த்த பலரும் தங்களது கருத்துகளை இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த படத்தை பார்த்துவிட்டு ஆனந்த் எல் ராய் தனுஷின் நடிப்பு மிக அற்புதமாக இருந்ததாகவும் படத்தின் கருத்துக்கள் அனைத்தும் நன்றாக இருந்ததாகவும் தனுஷின் நடிப்பை ஆகா ஓகோ புகழ்ந்து தள்ளியுள்ளார் ஆனந்த் எல் ராய்.
ஆனால் தனுஷை வைத்து ஆனந்த் எல் ராய் தற்போது பாலிவுட்டில் அட்றங்கி ரே என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.