சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ஒரு Biopic-கே இன்னும் வந்த பாடில்லை.. அதுக்குள்ள இன்னொரு biopic-ல் கமிட் ஆன தனுஷ்

நடிகர் தனுஷ் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி கொண்டு இருக்கிறார். இதற்க்கு நடுவில் இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

எப்படி அவரால் மட்டும் ஒரே நேரத்தில் இத்தனை வேலைகளை செய்யமுடிகிறது என்பது பலருக்கு ஆச்சரியத்தை தரக்கூடிய விஷயமாகவே உள்ளது.

இந்த நிலையில், அவர் தற்போது ஹிந்தி படத்தில் அடுத்து நடிக்க போகிறார். தேரே இஷ்க் மெய்ன் என்ற படத்தில் நடித்து முடித்த கையேடு, அடுத்ததாக ஹாலிவுட் படமான Street fighter படத்திலும் நடிக்கப்போகிறார்.

இப்படி பல படங்களில் இவர் Date கொடுத்திருப்பதால், இளையராஜா biopic-ல் நடிப்பது டவுட் தான். காரணம் இளையராஜா, ஒருவர் தன்னுடன் பயணித்துவிட்டு, தன் கதையில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

அதற்கு தனுஷிடம் நேரம் இல்லை. இதனால் தான் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வேறு ஒரு Biopic-ல் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார்.

அதற்கான அதிகாரபூர்வ அப்டேட் சீக்கிரமே வெளியாகும் என்று கூறப்படுகிறது. சொல்லப்போனால், தனுஷை போல ஒரு ஆல் ரௌண்டரின் Biopic-ல் தான் நடிக்கப்போகிறார்.

அதனால் தான் இளையராஜா biopic-ல் இருந்து கழண்டுவிட்டாரா என்பதும் சந்தேகமாக உள்ளது.

70-ஸ் ஹீரோவாக மாறும் தனுஷ்

70, 80 காலகட்டத்தில் சிவாஜி கணேசன், MGR, போலவே திரைத்துறையில் உச்சத்தில் இருந்தவர் சந்திரபாபு. நடிப்பு மட்டுமின்றி, காமெடியன், இயக்குனர், பாடகர் என்று ஆல்-ரவுண்டராக இருந்துள்ளார்.

இவரது வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளார் தனுஷ். இந்த படத்தில் ஹீரோவாகவும் தானே நடிக்க முடிவு செய்துள்ளார்.

சந்திரபாபு அந்த காலத்திலேயே, அவர் திரை துறையில் உச்சத்தில் இருந்தபோது, கிறீன் ரோட்டில் 20 acre நிலம் வாங்கியவர். பிற்காலத்தில், MGR-ஐ வைத்து மாடி வீட்டு ஏழை என்று ஒரு படம் எடுக்க முடிவு செய்துள்ளார்.

அந்த படத்துக்காக தானே நிறைய செலவும் செய்துள்ளார். ஆனால் அந்த படம் கடைசியில் வெளியாகவே இல்லை.

இதனால், பண ரீதியாகவும் மன ரீதியாகவும் நிறைய துன்பங்களுக்கு உள்ளானார். இப்படி பட்ட சூழ்நிலையில், 1974-ஆம் ஆண்டு இயற்க்கை எய்தினார்.

இவர் சினிமாவுக்கு செய்த விஷயங்கள் பலருக்கு தெரியாமலே இருப்பதனால் இந்த முடிவை எடுத்துள்ளார் தனுஷ்.

Trending News