ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அட! தனுஷ் விவாகரத்து இல்லையாம்பா.. அது தெரியாம என்னென்னமோ பேசிக்கிட்டு

சமீபத்தில் வெளிவந்த தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து செய்திகள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் வைரலானது. ஆளாளுக்கு கண்ணு, காது, மூக்கு என எல்லாம் வச்சி வரிசையாக ஒரு கதை சொல்லிக் கொண்டிருக்க, அட அதெல்லாம் எதுவும் இல்லை என கஸ்தூரி கூறுகிறார் என ஒரு செய்தி பரவுகிறது.

இந்த செய்திகளால் நாட்டிற்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றாலும் நம்ம மக்களுக்கு அதுதானே சுவாரஸ்யம். இந்த தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து விஷயத்தில் ரஜினி பஞ்சாயத்து பண்ணார் எனவும் செய்திகள் வந்தது. விசாரித்ததில் அதுவும் உண்மைதானாம்.

இந்த தனுஷ் விவாகரத்து விஷயத்தில் மிகவும் ஷாக் ஆன நடிகை கஸ்தூரி, தனுஷ் ஐஸ்வர்யா இருவரிடமும் போனில் தொடர்பு கொண்டு பேசினாராம், ‘அவர்கள் இருவரும் ஹைதராபாத் இருப்பதால் அவர்களால் இதனை பற்றிய விளக்கம் கொடுக்க முடியவில்லை.

அவர்கள் இருவருக்கும் உள்ளது வெறும் சண்டைதான், விவாகரத்து எல்லாம் இல்லை. எல்லாரும் ஆளுக்கு ஒரு கற்பனை செய்தியை வெளியிட வேண்டாம். இது வெறும் சண்டையால் வந்த ஒரு சின்ன பிரிவுதான் சில நாட்கள் பிரிந்து வாழ்வார்கள் என்பது போல கஸ்தூரி கூறுகிறார் என ஒரு செய்தி பரவுகிறது. இது உணமையானால் அனைவர்க்கும் மகிழ்ச்சிதான்.

rajini-dhanush-1
rajini-dhanush-1

என்ன நடந்தது என்றே தெரியவில்லை ஆனால் ஆளாளுக்கு அமலாபால், சமந்தா, கீர்த்தி சுரேஷ் என பலரையும் இழுத்துவிட்டு ரசிகர்கள் கிசுகிசு பேசியே சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதில் எது உண்மை என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

Trending News