சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

நீங்க பிரியுறது அந்த ஜட்ஜ்-க்கே புடிக்கல.. நேயர் விருப்பமாக மாறிய குடும்ப நல நீதிமன்றம்

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், பாடகர் என பன்முகத்திறமை கொண்ட தனுஷ் தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியுள்ளார். அதை அடுத்து மேலும் இட்லி கடை என்ற மற்றொரு படத்தை இயக்கி வருகிறார். நடிப்பு, இயக்கம் என முழு பிஸியாக இருக்கும் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஷ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் பிரியப்போவதாக அறிவித்து இருந்தனர்.

இவர்களை தொடர்ந்து திரை துறையில் பல டிவோர்ஸ் நடந்ததால், யாருக்கு டிவோர்ஸ் நடந்தாலும் அதுக்கு தனுஷை காரணம் காட்ட ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலையில், இவர்கள் பிரிவதாக அறிவித்தபோதிலும், ஒருவரை ஒருவர் சமூக வலைத்தளங்களில், Follow செய்வதும், லைக் போட்டு கொள்வதும், குழந்தைகளுக்காக அடிக்கடி சந்திப்பதாகவும் தான் இருந்தது.

இதனால், இவர்கள் எப்படியாவது சேர்ந்து விட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. மேலும் சூப்பர்ஸ்டாரும் அதை தான் விரும்புவார். தற்போது இவர்களுக்கு சிக்னல் கொடுப்பது போலவே பல விஷயங்கள் நடக்கிறது.

ஜட்ஜ் செய்த நல்ல வேலை

இவர்கள் இருவரும் பிரிவது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும் இவர்களின் பிரிவினை தவிர்க்க இவர்களது நண்பர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், அது எந்த வித பலனையும் அளிக்க வில்லை எனவும் தெரிய வந்தது. இருவரின் உறுதியான முடிவாக விவாகரத்து இருந்தது.

அவர்கள் அளித்த மனுவில், ‘கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற எங்களது திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர். இவர்கள் தாக்கல் செய்த மனு இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருமே ஆஜராகாத காரணத்தால், வரும் அக்டோபர் 19 ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணையை நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது. இருவரும் ஆஜராகாமல் தவிர்த்து இருப்பது ஒரு வேளை இருவரும் சேர்ந்து வாழ உள்ளார்களோ என சமூக வலைத் தளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து ரசிகர்கள், ‘அண்ணா அண்ணி ப்ளீஸ் சேர்ந்திருங்க.. பிரியாதிங்க’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News