சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

மீண்டும் ஒன்று சேரும் தனுஷ், ஐஸ்வர்யா.. இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ராயன்

Dhanush: சமீபகாலமாக பிரபலங்களின் விவாகரத்துச் செய்தி அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு மிகுந்த மனவேதனையை கொடுத்து வருகிறது. சமீபத்தில் கூட ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இதற்கு முன்னதாக ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியும் பிரிவதாக அறிவித்தனர். இந்த ஜோடிகளை காட்டிலும் ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை கொடுத்தது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவுதான். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் 18 வருடம் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

ஆனால் திடீரென இருவருமே மனம் ஒத்து பிரிவதாக அறிக்கை வெளியிட்டனர். இரு வீட்டார் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்த போதிலும் இருவரும் தங்கள் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்காமல் இருந்தனர். இப்போது மீண்டும் இவர்கள் இருவரும் ஒன்று சேர்வது போல் தகவல் வெளியாகி இருக்கிறது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மீண்டும் ஒன்று சேர வாய்ப்பிருக்கிறது

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்போது படங்களை இயக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவர் எடுத்த லால் சலாம் படம் இப்போது ஓடிடியில் வெளியாக இருக்கிறது. மற்றொருபுறம் தனுஷும் நடிப்பு, இயக்கம் என்று பிஸியாக இருந்து வருகிறார்.

ஐஸ்வர்யா போஸ்ட்க்கு லைக் போட்ட தனுஷ்

aishwarya-dhanush
aishwarya-dhanush

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். தனது மகனுடன் வெளியிடும் புகைப்படங்களுக்கு தனுஷ் லைக் போட்டு வந்தார்.

இப்போது சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓணம் பண்டிகை கொண்டாடிய நிலையில் அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். அதற்கும் தனுஷ் லைக் போட்டுள்ள நிலையில் இருவருக்குள் இணக்கமான சூழ்நிலை இருப்பதாக தெரிகிறது. ‌ ஆகையால் இருவரும் மீண்டும் ஒன்று சேரவும் வாய்ப்பிருக்கிறது.

படு பிஸியாக இருக்கும் தனுஷ்

Trending News