சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இதான் உண்மையான தீபாவளி.. மீண்டும் இணையும் ஐஸ்வர்யா தனுஷ்.. கொண்டாடி கொளுத்தும் ரசிகர்கள்

தனுஷ் தற்போது தொடர்ந்து படங்களை இயக்குவதிலும், நடிப்பதிலும் கவனம் செலுத்தி வரும் நிலையில், அவர் கவனம் தற்போது குடும்பத்தின் பக்கமும் சென்றுள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்து வேறுபாடு காரணமாக மனைவி ஐஸ்வர்யைவை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்த தனுஷ், தற்போது மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ தயாரானதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணமாக உள்ளது. ஏற்கனவே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது, இரண்டு முறையும் ஆஜராகவில்லை தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா. மேலும் தனுஷ் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் போட்டோக்களுக்கு லைக் போட்ட வண்ணமாக இருக்கிறார். டீனேஜ் காதலர்களை போல ஒரு பக்கம் ஈகோ மறுபக்கம் காதல் என இருக்கிறார்கள்.

தேவைப்பட்டது ஒரு பிரேக் தான் போல

சில நாட்களாகவே, சமூக வலைதளங்களில் இருவரும் பரஸ்பரமாக செல்லும் நிலையில், ரஜினி நடித்த வேட்டையன் படத்தை குடும்பத்துடன் அனைவரும் ஒரே தியேட்டரில் பார்த்து ரசித்தனர். இந்த நிலையில் தற்போது இருவரும் ஒன்றாக தீபாவளியை கொண்டாடியுள்ளனர்.

அதுமட்டுமில்லை 3ஆவது முறையாக இருவரும் கோர்ட்டில் ஆஜராகாத நிலையில், அடுத்து என்ன என்பதை ரசிகர்கள் எதிர்நோக்கி இருந்த நேரத்தில், இருவரும் போயஸ் கார்டனில் சந்தித்து பேசியுள்ளனர். அந்த சந்திப்பு சுமூகமாக முடிந்துள்ளது. கருத்து வேறுபாடுகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

மேலும் எல்லாவற்றையும் fresh-ஆக ஆரம்பிக்க முடிவு செய்துள்ளனர். இதை தொடர்ந்து ரசிகர்கள் இந்த செய்தியை கேட்டு கொண்டாடி கொளுத்துகின்றனர். மேலும் இவர்களுக்கு தேவை பட்டது ஒரு பிரேக் தான், விவாகரத்து அளவுக்கு பிரச்சனையை இல்ல போல என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News