திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தனுஷ், ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் நடந்த திடீர் சந்திப்பு.. விவாகரத்து முடிவுக்கு முற்றுப்புள்ளியா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் கடந்த சில மாதங்களாகவே ஏகப்பட்ட பிரச்சனைகள் நிலவி வருகிறது. அதிலும் முக்கியமாக அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா தன்னுடைய கணவர் தனுஷை பிரிய போவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதனால் ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சி அடைந்தது. அதன் பிறகு அவர்களுடைய விவாகரத்திற்கு இதுதான் காரணம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் இருவரும் தங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தனர்.

Also read:பொன்னியின் செல்வனை கண்டுக்காத கமல், ரஜினி.. சைலன்டாக ஆட்டி வைக்கும் பெரிய இடம்

இருப்பினும் 18 ஆண்டு கால திருமண வாழ்வை அவ்வளவு எளிதில் முறித்து விடக்கூடாது என்பதற்காக பலரும் அவர்களுக்கு அறிவுரை கூறி வந்தனர். அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க இரு தரப்பிலிருந்தும் பல சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ரஜினியை சந்தித்து பேசியுள்ளனர். சூப்பர் ஸ்டார் வீட்டில் நடந்த இந்த சந்திப்பில் அவர்கள் இருவரும் மனம் விட்டு பேசி உள்ளதாக தெரிகிறது.

Also read:மீண்டும் ஒன்று சேர்ந்த தனுஷ், ஐஸ்வர்யாவின் புகைப்படம்.. விவாகரத்துன்னு சொன்னதெல்லாம் கட்டுக்கதையா!

ஏற்கனவே அவர்கள் குழந்தைகளுக்காக தங்கள் முடிவை கைவிடும் நிலையில் இருந்தனர். தற்போது ரஜினியின் சமரச பேச்சுவார்த்தைகளுக்கு இணங்கி அவர்கள் தங்கள் விவாகரத்து முடிவை கைவிட்டு சேர்ந்து வாழ முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

விரைவில் அவர்கள் இருவரும் தாங்கள் மீண்டும் இணைந்து வாழ போகும் அறிவிப்பை வெளியிடவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த செய்தி தற்போது ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Also read:தனுஷ், ஐஸ்வர்யா கொடுக்கும் ட்விஸ்ட்.. சந்தோஷமான செய்தியை அறிவிக்கப் போகும் அந்த நாள்

Trending News