ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

முக்கிய தகவலை பகிர்ந்து கொண்ட D 43 படத்தின் படக்குழு.. கொண்டாட்டத்தில் திக்குமுக்காடும் ரசிகர்கள்

நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக டி 43 என பெயரிட்டுள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

இப்படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்றது. பின்னர் தி கிரே மேன் எனும் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக தனுஷ் அமெரிக்கா சென்றுவிட்டார். தற்போது சூட்டிங்கை முடித்து சில தினங்களுக்கு முன்பு திரும்பிய தனுஷ் மீண்டும் டி43 ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்று தொடங்கியது. இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர்கள் அனைவரும் ஹைதராபாத்தில் தங்கியுள்ளனர். இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்துவிடும் என தெரிகிறது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், விரைவில் ஃப்ர்ஸ்ட் லுக்கையும், திரையரங்கில் வெளியிடும் தேதியும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

dhanush-karthik
dhanush-karthik

தமிழ், தெலுங்கு, ஹாலிவுட் என பட்டையை கிளப்பி வருகிறார் தனுஷ். நீங்க கலக்குங்க சார்…..

Trending News