செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பணமும், சதுரங்கமும்.. தனுஷின் குபேரா கிளிம்ஸ் வீடியோ எப்படி இருக்கு?

Kubera: நடிகர் தனுஷ் நடித்த தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆக இருக்கும் குபேரா படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி இருக்கிறது. வீடியோவின் தொடக்கத்தில் ஒரு பெரு நகரம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பது காட்டப்பட்டு அப்படியே தனுஷின் அப்பாவி முகம் காட்டப்படுகிறது.

குபேரா கிளிம்ஸ் வீடியோ

அழுக்கு சட்டை, முகத்தில் தாடி, கவலை தோய்ந்த முகம் என முதல் பார்வையிலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற விட்டு விட்டார் தனுஷ். அதைத் தொடர்ந்து நாகார்ஜுனா தன் குடும்பத்துடன் சந்தோஷமாக இருப்பது போல் காட்டப்பட்டு இருக்கிறது.

இதில் நாகார்ஜுனாவுக்கு மனைவியாக நடிகை சுனைனா நடித்திருக்கிறார். மேலும் நடுநடுவே கார்ப்பரேட் கம்பெனி மற்றும் கார்ப்பரேட் முதலாளி போன்ற காட்சிகள் வருகிறது. மேலும் ஒரு அறை முழுக்க பணக்கட்டுகள் நிறைந்து இருக்கிறது.

அதை தொடர்ந்து ஒரு தெருவின் நடுவே தனுஷ் தலை தெறிக்க ஓடுகிறார். வீடியோவின் தொடக்கத்தில் அப்பாவி போல், பிச்சைக்காரன் தோற்றத்தில் இருக்கும் தனுஷ் வீடியோ முடியும்போது பட்டு வேட்டி சட்டையுடன் ஒரு கோவில் முன்னாடி நிற்கிறார்.

இதிலிருந்து படத்தில் ஒரு பெரிய சர்ப்ரைஸ் இருக்கிறது என தெரிந்து விட்டது. மொத்தத்தில் குபேரா படத்தின் கிளிம்ஸ் வீடியோ படம் எப்போ ரிலீஸ் ஆகும் என்ற பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டது. என்று தான் சொல்ல வேண்டும் மேலும் நடிகை ராஷ்மிகா மந்தனா வித்தியாசமான கேரக்டரில் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

குபேரா படத்தை இயக்குனர் சேகர் கமுலா இயக்கியிருக்கிறார். இவர் ‘ஃபிடா’, ‘லவ் ஸ்டோரி’ போன்ற தெலுங்கு படங்களை இயக்கியிருக்கிறார். இந்த வீடியோவுக்கு மேலும் பரபரப்பு சேர்த்தது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசைதான். படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News