வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஒன்றாக சந்தித்து கொண்ட ராயன்-ராக்காயி.. அடடே! கண் கொள்ளா காட்சியா இருக்கே

Dhanush: நயன்தாரா மற்றும் நடிகர் தனுஷின் முதல் சந்திப்பு எப்படி இருந்திருக்கும் என நம்மில் பலருக்கும் தெரியாது. ஆனால் அந்தப் பத்து கோடி பஞ்சாயத்துக்கு பிறகு இன்னைக்கு ஒரே இடத்தில் கூடியிருக்கிறார்கள் நம்ம ராயனும், ராக்காயியும்.

கடந்த வார சனிக்கிழமை தொடங்கி இன்று வரை சமூக வலைத்தளத்தை ரணகளம் ஆக்கிக் கொண்டிருக்கிறது தனுஷ் மற்றும் நயன்தாரா பஞ்சாயத்து. NOC கொடுக்காத தயாரிப்பாளராக தனுஷ், நான் உன் பட சம்பந்தப்பட்ட வீடியோவை நீக்க மாட்டேன், என்ன வேணா பண்ணிக்கோ என்று அசால்ட் ஆக டாக்குமெண்டரியை வெளியிட்ட தைரிய லட்சுமி ஆக நயன்தாராவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

ராயன்-ராக்காயி

குறிப்பிட்ட காலகட்டம் வரை தனுஷ் மற்றும் நயன்தாரா இருவருமே நெருங்கிய நண்பர்கள். இவர்கள் ஒன்றாக சேர்ந்து கொடுத்த இன்டர்வியூகள் இன்று வரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் நயன்தாரா தனுஷ் மீது கடுமையான விமர்சனத்தை வைத்தார்.

இதைத்தொடர்ந்து நான்கே நாட்களில் இருவரும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. தனுஷ் நடித்து கொண்டிருக்கும் இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷிற்கு இன்று திருமணம் நடந்திருக்கிறது. இந்த திருமண விழாவில் தான் இருவருமே கலந்து கொண்டிருக்கிறார்கள்.

தனுஷ் நயன்தாராவுக்கு முன்னமே மண்டபத்திற்கு வந்துவிட்டார். அவருக்குப் பிறகுதான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வந்தார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. தனுஷ் அமர்ந்திருக்கும் அதே வரிசையில் தான் நயன்தாராவுக்கும் இருக்கை இருந்தது. ஒரு காலத்தில் நல்ல நண்பர்களாக இருந்த இவர்கள், இன்று யாரோ போல ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்றிருக்கிறார்கள்.

Dhanush Nayan
Dhanush Nayan

Trending News