ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

தனுஷ் , சிம்பு பட நடிகையை வளைத்து போட்ட புது மாப்பிள்ளை.. விரைவில் டும் டும்!

இந்திய சினிமா உலகத்தில் பிரபலமாக இருக்கும் பல நடிகைகள் தற்போது அடுத்தடுத்து வரிசையாக திருமணம் செய்து கொள்கின்றனர். மார்க்கெட் நன்றாக இருக்கும்போது சட்டென இவர்கள் திருமணம் செய்து கொள்வது இந்திய சினிமா ரசிகர்களுக்கே சற்று ஆச்சரியமான செய்தியாக தான் இருக்கிறது. நடிகைகள் அலியா பட், ஹன்சிகா மோத்வானி போன்ற இப்படித்தான் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே திருமணம் செய்து கொண்டனர்.

சில வருடங்களுக்கு முன்பு வரை நடிகைகள் தங்களுக்கு மார்க்கெட் இருக்கும் வரை திருமணம் என்பதை பற்றி யோசிக்கவே மாட்டார்கள், ஆனால் தற்போது அந்த ட்ரெண்டே மொத்தமாக மாறி இருக்கிறது. இந்த வரிசையில் ஒரு தென்னிந்திய நடிகையும் சேர்ந்திருக்கிறார். இவர் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகையாக இருப்பவர். திடீரென்று இவருடைய திருமணத்தைப் பற்றி வரும் செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லலாம்.

Also Read:திரும்பத் திரும்ப வேதாளத்துக்கு வரும் வம்பு.. லண்டன் போனாலும் சிம்புவை துரத்தி வெச்ச பெரிய ஆப்பு

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டா என்னும் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்தான் மேகா ஆகாஷ். இந்த படம் வணிக ரீதியாக வெற்றியை பெறவில்லை என்றாலும், நடிகை மேகா மட்டும் தமிழ் சினிமா ரசிகர்களின் க்ரஷ் நடிகையாக மாறினார்.

அதன்பின்னர் மேகா ஆகாஷ், நடிகர் சிம்பு நடித்த வந்தா ராஜாவா தான் வருவேன் என்னும் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த, பேட்ட திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். சமீபத்தில் தமிழில் வெளியான சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரன் என்னும் படத்திலும் மேகா ஆகாஷ் நடித்திருந்தார்.

Also Read:சிம்புவால் கமலுக்கு ஏற்பட்ட தலைவலி.. தேரை இழுத்து தெருவில் விட்ட கதையா ஆயிடுச்சு!

தற்போது நடிகை மேகா ஆகாஷின் திருமண செய்தி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் பிரபல அரசியல்வாதியின் மகன் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த அரசியல்வாதி தமிழகத்தை சேர்ந்தவர் எனவும், எம்.பி ஆக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

மேகா ஆகாஷ் தரப்பில் இருந்து இந்த செய்தியை பற்றி எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் யார் அந்த அரசியல்வாதியின் மகன் என்று நெட்டிசன்கள் தற்போது வலை வீசி தேடிக் கொண்டிருக்கின்றனர்.

Also Read:உங்களுடன் எத்தனை படம் பண்ணவும் ரெடி, அந்த இயக்குனர் மட்டும் வேண்டாம்.. தயாரிப்பாளருக்கு செக் வைத்த சிம்பு

Trending News