திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

உருவ கேலிக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை.. தனுஷ், விஜய் சேதுபதி ஒப்பிட்டு ஆவேசம்

சினிமாவைப் பொறுத்தவரை அழகு என்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் திறமை இருந்தால் அழகு, தோற்றம் ஒரு விஷயமே இல்லை என தமிழ் சினிமாவில் பலர் நிரூபித்து உள்ளனர். அந்த வகையில் உருவ கேலிக்கு தனுஷ், விஜய் சேதுபதியை ஒப்பிட்ட தக்க பதிலடி கொடுத்துள்ளார் நடிகை ஒருவர்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி. சூரரைப் போற்று படத்திற்கு கிட்டத்தட்ட ஆறு தேசிய விருது கிடைத்த நிலையில் இதில் சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளிக்கும் கிடைத்துள்ளது.

Also Read : நோ என்பதை கற்றுக் கொடுத்த திரையுலகம்.. முதல் படத்தில் வாங்கிய சம்பளத்தை ஒளிவுமறைவின்றி கூறிய அபர்ணா!

தமிழில் 8 தோட்டாக்கள், தீதும் நன்றும், சர்வம் தாளமயம், வீட்ல விசேஷம் போன்ற படங்களில் அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். தற்போது நித்தம் ஒரு வானம் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அபர்ணா பாலமுரளி உருவ கேலி பற்றி பேசி உள்ளார்.

அதாவது ஆரம்பத்தில் அபர்ணா சற்று குண்டாக இருப்பதால் வருந்தி உள்ளார். இதனால் இவருக்கு பல விமர்சனங்களும் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து ஒருவரின் எடை அதிகரிப்பது என்பது அவரின் உடலில் உள்ள பிரச்சனைகள் காரணமாக ஏற்படுகிறது.

Also Read : பயங்கர குண்டான சூரரைப் போற்று அபர்ணா.. உச்சி முதல் பாதம் வரை ஒரே சைஸ் ஆகிட்டாங்களே!

நான் இப்படி குண்டாக இருந்தால் இதே தேற்றத்துடன் என்னை படத்தில் நடிக்க அழைப்பவர்கள் ஏராளம். ஆனாலும் சிலர் ஒல்லியான நடிகைகளை மட்டுமே ஹீரோயின்களாக பார்க்கப்படுகிறார்கள். தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கும் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி போன்றோரின் திறமைக்கு முன்னால் தோற்றம் ஒன்றுமே இல்லை.

ஹீரோக்களுக்கு மட்டும் இவ்வாறு பாகுபாடு பார்க்காத சினிமா ஹீரோயின்களுக்கு என்று வந்தவுடன் உடல் தோற்றத்தை பார்க்கிறார்கள். மேலும் என்ன அம்மாவாக நடிக்கிறீர்களா என்று கூட கேட்டுள்ளார்கள். மேலும் ஒல்லியாக இருந்தால் மட்டும்தான் கதாநாயகி வாய்ப்பு வருகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என ஆவேசமாக அபர்ணா கூறியுள்ளார்.

Also Read : அத்துமீறி ஆட்டம் போடும் விஜய் சேதுபதி.. வாலை ஒட்ட நறுக்கிய அட்லீ

Trending News