புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அக்கட தேசத்தை குறிவைக்கும் இயக்குனர்கள்.. உச்சகட்ட கடுப்பில் தனுஷ்

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் பெரிய ஹீரோக்களை இயக்குவதற்காக என்றே சில இயக்குனர்கள் இருப்பார்கள். அந்த வகையில் சங்கர், ஏ ஆர் முருகதாஸ் போன்ற இயக்குனர்கள் ரஜினி, விஜய் போன்ற பெரிய நடிகர்களை வைத்து பல திரைப்படங்களை இயக்கி இருக்கிறார்கள்.

ஆனால் தற்போது பல இளம் இயக்குனர்களும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை இயக்க ஆரம்பித்துவிட்டனர். அந்தவகையில் நெல்சன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட இயக்குனர்கள் தற்போது ரஜினி, விஜய், கமல் உள்ளிட்டவர்களுக்கு படம் இயக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அதனால் தற்போது தமிழ் இயக்குனர்கள் பலரும் தெலுங்கு பக்கம் நடையை கட்டி விட்டார்கள். அந்த வகையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து ஒரு திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அதேபோன்று இயக்குனர் லிங்குசாமி தெலுங்கில் தி வாரியர் என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளிவர இருக்கிறது. இவர்களை தொடர்ந்து தமிழில் தற்போது வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் ஏ ஆர் முருகதாஸ் தெலுங்கு படம் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வரிசையில் தமிழில் பல தரமான திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன் தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் நடிகர் தனுஷ் தற்போது உச்ச கட்ட கடுப்பில் இருக்கிறாராம்.

ஏனென்றால் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் அசுரன், ஆடுகளம் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்கள் வந்திருக்கிறது. தற்போது தனுஷூக்கு சொல்லிக்கொள்ளும்படியான வெற்றிப் படங்கள் எதுவும் அமையவில்லை. மேலும் அவருடைய பர்சனல் வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கிறது.

இதையெல்லாம் சரிக்கட்டும் விதமாக தான் அவர் வெற்றிமாறனுடன் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என்ற முடிவில் இருந்துள்ளார். மேலும் அவர் வெற்றிமாறனுக்கு இதுகுறித்து பலமுறை அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் வெற்றிமாறன், தனுஷை தவிர்த்து விட்டு தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார். இதுதான் தற்போது தனுஷுக்கு, வெற்றி மாறன் மீது அதிக கோபத்தை தூண்டியிருக்கிறது.

Trending News