செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ரஜினியால், மகன்களையும் ஒதுக்கும் தனுஷ்.. விவாகரத்திற்கு பின்னும் நிம்மதி இல்லாமல் தவிப்பு

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் சில மனகசப்பு ஏற்பட்டதால் கடந்த வருடம் பரஸ்பரமாக பிரிய வேண்டும் என்று முடிவு எடுத்து விவாகரத்து செய்யப் போவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.. இதனால் தனுஷ் பல சர்ச்சைகளில் சிக்கி இவரது பெயரை கெடுத்துக் கொண்டார். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் படங்களில் நடிப்பதில் முழு கவனத்தையும் செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியானது. இவரது விவாகரத்துக்கு பிறகு இப்படி வேலைகளில் பிஸியாக இருந்தாலும், பிள்ளைகள் மீது காட்டும் பாசம் மட்டும் குறையவே இல்லை. அவர்களை அடிக்கடி சந்திப்பது, வெளிநாடு அழைத்துச் செல்வது இந்த மாதிரி அவர்களுடன் நேரத்தை செலவிட்டு வந்தார்.

Also read: பத்தே நாட்களில் விஜய்யின் மொத்த வசூலையும் தட்டி தூக்கிய தனுஷ்.. பெரும் கலக்கத்தில் இருக்கும் தளபதி

முக்கியமாக அவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் யார் என்ன சொன்னாலும் கண்டுகொள்ளாமல் அவர்களுக்காக செய்தார். இது அவருடைய குழந்தைகள் மீது இருக்கும் அன்பை வெளிக்காட்டியது. இவர் இந்த மாதிரி விவாகரத்துக்கு பிறகும் அவர்களுடைய குழந்தைகள் மீது அக்கறையாக இருப்பது அனைவரும் பாராட்டி வந்தனர். தற்போது இவரிடம் இருந்து இந்த விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டே வருகிறது.

அதாவது தனுஷ் சில காரணங்களால் அவரது மகன்களையும் ஒதுக்கி வருகிறார் என்று தகவல்கள் வெளி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு லிங்கா மற்றும் யாத்திரா பள்ளியில் நடந்த விழாவில் இவர்களுடைய அம்மா ஐஸ்வர்யா மட்டும்தான் கலந்து கொண்டார். அதாவது குழந்தைகளுக்கு பள்ளியில் நடக்கிற நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பெற்றோர்களுடைய முக்கியமான கடமையானது. ஆனால் தனுஷ் அந்தக் கடமையைத் தவற விட்டுவிட்டார். குழந்தைகளின் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தனுஷ் பங்கேற்கவில்லை.

Also read: அந்த மாதிரி கமல் படங்களில் நடிப்பது ரொம்ப கஷ்டம்.. நடிப்பு அசுரன் வியந்து பார்த்த கதாபாத்திரம்

இதனை அடுத்து 150 கோடிக்கு பிரம்மாண்டமான பெரிய வீட்டை கட்டி அதில் தங்கை, அம்மா, அப்பா என அனைவரும் அழைத்திருக்கிறார். இப்படி பிரம்மாண்டமாக கட்டின வீட்டிற்கு ரஜினி குடும்பத்திலிருந்து யாரையும் அழைக்கவில்லையாம். முக்கியமாக தனுஷ் ,மகன்களை கூட கூப்பிட வில்லையாம். இதற்கு காரணம் தனது மகன்களுக்கு என்ன செய்தாலும் அவர்கள், தாத்தா ரஜினி இடம் அதிகம் பாசம் காட்டுவதாகவும், அவர் சொல்வதை கேட்பதாகவும், அவர் கூட எப்போதுமே இருப்பதாகவும் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

இதனால் கோபமான தனுஷ், மகன்களையும் சில விஷயங்களுக்கு அழைக்காமல் ஒதுக்குகிறார். இப்படி விவாகரத்துக்கு பிறகும் நிம்மதி இல்லாமல் அல்லோளப்பட்டு வருகிறார். மற்றும் குழந்தைகளிடம் பாசத்தைக் காட்டி வந்த தனுஷ் இப்பொழுது ரஜினியால் மகன்களையும் ஒதுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டார்.

Also read: சொந்த செலவில் சூனியம் வைத்ததால் சைக்கிளுக்கு கூட வழியில்லாத அப்பா.. அவமானப்பட்டு அசுர வளர்ச்சி அடைந்த தனுஷ்

Trending News