தமிழகத்தில் நம்பர் ஒன் யார் என்ற போட்டி தற்போது நிலவிக் கொண்டிருக்கும் சமயத்தில், பத்தே நாட்களில் விஜய் படத்தின் வசூலை தட்டி தூக்கி இருக்கிறார் தனுஷ். இதை நினைத்து தற்போது தளபதி விஜய் பெரும் கலக்கத்தில் இருக்கிறார்.
விஜய் தெலுங்கிலும் ஆட்டம் காட்ட வேண்டும் என, அங்கிருக்கும் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்த வாரிசு படத்தை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் செய்தார். தெலுங்கு திரையுலகிலும் தனி முத்திரை பதிக்கும் நோக்கத்துடன் விஜய் களம் இறங்கினார்.
Also Read: விஜய்யை ஓரங்கட்டி வெற்றி கண்ட தனுஷ்.. சைலன்ட்டாக காரியத்தை சாதித்த வாத்தி
ஆனால் அவர் போட்ட திட்டம் சுக்கு நூறாக உடைந்தது. தெலுங்கில் வாரிசு படத்திற்கு ஓரளவு வரவேற்பு மட்டுமே கிடைத்தது. இதனால் பத்தே நாளில் வாரிசு படத்தின் வசூலை முன்னணி நடிகரின் படம் ஓவர் டேக் செய்து சாதனை படைத்திருக்கிறது. தனுஷ் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான வாத்தி திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.
இதில் சம்யுக்தா, சமுத்திரக்கனி உள்ளிட்ட தனுசுடன் இணைந்து நடித்திருக்கின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற இரு மொழிகளிலும் உருவான இந்த படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைக்கிறது. மேலும் பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வாத்தி படம் தமிழ் பதிப்பாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.
Also Read: வாத்தி சொதப்பிய 5 விஷயங்கள்.. தெலுங்கு படமா, தமிழ் படமா.? பாவம் இயக்குனரே கன்பியூஸ் ஆயிட்டாரு
தனுஷுக்கு பிறமொழி ரசிகர்களும் பெரிய பேனர் வைத்தும், போஸ்டர்களை ஒட்டியும் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதிலும் தெலுங்கில் வாரிசு படத்தில் ஒட்டுமொத்த வசூலை, வெறும் பத்தே நாட்களில் தனுஷின் வாத்தி வாரி குவித்த சாதனை படைத்திருக்கிறது. மிகவும் எதிர்பார்ப்புடன் தெலுங்கில் களமிறங்கிய விஜய்க்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது.
ஆனால் பக்கத்து வீட்டு பையன் போல் மிக எதார்த்தமாக நடித்துக் கொண்டிருக்கும் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என வெரைட்டி காட்டிக் கொண்டிருக்கும் நிலையில் டோலிவுட்டிலும் மாஸ் காட்டியுள்ளார். ‘சுள்ளான் சூடான சுளுக்கு எடுத்துடுவேன்’ என்ற டயலாக் உடன் தனுஷ் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் இந்த விஷயத்தை ட்ரெண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
Also Read: கருத்து கேட்டு கருத்துபோன ப்ளூ சட்டை மாறன்.. தனுஷ் வாத்தியை வச்சி செய்து விமர்சனம்