சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

விவாகரத்து மட்டும் இல்ல! தனுஷின் கனவும் பாதியில் முடிந்தது.. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலை

தனுஷ் கோலிவுட்டில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர் என பல பரிமாணங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி மற்றும் பாலிவுட் படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.

என்னதான் தனுஷ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வந்தாலும் அவ்வபோது படங்களை இயக்குவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தனுஷ் இயக்கி நடித்த பா.பாண்டி என்ற படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அந்த படத்திற்கு பின்னர் தனுஷ் வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை. ஆனாலும் தனது வாழ்க்கையில் ஒருமுறையாவது ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் தனுஷின் நீண்ட நாள் ஆசையாம். இதை பல மேடைகளில் தனுஷே வெளிப்படையாக கூறியுள்ளார்.

ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையை பார்த்தால் தனுஷின் இந்த ஆசை இறுதிவரை நிறைவேறாது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. ஏனெனில் தனுஷ் சமீபத்தில் அவரின் மனைவி ஐஸ்வர்யா உடனான 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிவித்திருந்தார்.

ரஜினியின் மகளை தான் தனுஷ் திருமணம் செய்துள்ளார் என்பது பலரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் அவர் விவாகரத்தை அறிவித்துள்ளதால் நிச்சயம் தனுஷின் ஆசை நிறைவேறாது என பலரும் கூறி வருகிறார்கள். ஒருவேளை இந்த பிரச்சனை சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டால் கூட தனுஷின் ஆசை நிறைவேறுமா என்பது கேள்விக்குறியே?

இப்போது வரை குடும்ப பிரச்சினையாக தான் உள்ளதாகவும் சமாதானம் பேசுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Trending News