வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரஜினிக்கு சவால் விடும் அளவிற்கு வீடு கட்டிய தனுஷ்.. மொத்த மதிப்பை கேட்டு வாயை பிளக்கும் திரையுலகம்

தனுஷ் சினிமா துறையில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரின் நடிப்பை பார்த்து ரசிக்கிற அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இவர் இந்த நிலையை அடைவதற்கு ஆரம்பக் காலத்தில் இருந்து அதிகமான தடைகளை சந்தித்திருக்கிறார். அதை அனைத்தையும் இப்பொழுது வெற்றி படிக்கட்டாக மாற்றிக் கொண்டார். ஆனால் அப்படிப்பட்ட இவருக்கு தனிப்பட்ட வாழ்க்கை சற்று கேள்விக்குறியாக மாறியது.

தனுஷ் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டு ஒற்றுமையான தம்பதிகளாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இப்பொழுது இவர்களுக்கிடையே ஒரு பிரிவு ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் பிரிவதற்கு முன்பே தனுஷின் நீண்ட நாள் ஆசையாக இருந்தது போயஸ் கார்டனில் மிகப்பெரிய ஒரு இடத்தை வாங்க வேண்டும் என்பதுதான்.

Also read: வாத்தி படத்தின் 2வது நாள் வசூல்.. கோடிகளை வாரி குவிக்கும் தனுஷ்

அந்த ஆசையை நிறைவேற்றுவதற்காக போயஸ் கார்டனில் ஒரு இடத்தை வாங்கி இருந்தார். மேலும் அந்த இடத்தில் 150 கோடிக்கு மேல் செலவு செய்து மிகப்பிரமாண்டமாக வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்திருந்தார். இந்த நீண்ட நாள் ஆசையை ஐஸ்வர்யா இடம் சொல்லி அதற்கான சம்மதத்தையும் வாங்கிக்கொண்டார்.

ஆனால் அதன் பிறகு இதை கட்டுவதற்காக ஏற்பட்ட பண பிரச்சனை காரணமாக தான் ஐஸ்வர்யாவுக்கும், தனுஷுக்கும் இடையில் ஒரு மோதல் ஏற்பட்டுவிட்டது. பின்னர் அதுவே இவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டு விவாகரத்து ஆவதற்கு காரணமாக அமைந்தது. இதன் பின்னர் பல சர்ச்சைக்குள் தனுஷ் ஆளானார். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் வீட்டைக் கட்டி முடிக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இவரிடம் இருந்தது.

Also read: அடுத்த நேஷனல் அவார்டை தட்டி தூக்க போகும் தனுஷ்.. எதிர்பார்ப்பை எகிற விட்ட பிரபலம்

பின்னர் தனுஷ் எப்படியோ ஒரு வழியாக கஷ்டப்பட்டு வீட்டை 150 கோடியில் அவர் ஆசைப்பட்ட மாதிரி கனவு கோட்டையாக கட்டி முடித்தார். அந்த வீட்டிற்கு தாய் தந்தையுடன் குடியேறிவிட்டார். இப்பொழுது இவர் ஆசைப்பட்ட மாதிரி வீடு கட்டி முடித்தாலும் இவரால் ஐஸ்வர்யாவுடன் வாழ முடியாமல் தனியாக தான் இருந்து வருகிறார்.

என்னதான் தனுஷ், ரஜினிக்கு சவால் விடும் விதமாக வீடு கட்டி முடித்திருந்தாலும் இவர் இந்த அளவிற்கு இருப்பதற்கு ரஜினியும் அவரது மகளும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறந்து விடக்கூடாது என்று பிரபலங்கள் கூறி வருகின்றனர். புது வீட்டுக்கு சென்ற நேரத்துலயாவது இவர் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கு ஒரு மாற்றமாக அமையும் என்று பேசப்படுகிறது.

Also read: எக்ஸ் பொண்டாட்டிக்கு போட்டியாக இறங்கிய தனுஷ்.. லால் சலாம் படத்தில் ஏற்பட்ட சிக்கல்

Trending News