வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கீர்த்தி சுரேஷிற்கு போன் செய்த பிரபலம்.. அவர் எப்பவுமே இப்படிதான்

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சாணி காகிதம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று அதைத்தொடர்ந்து தற்போது முன்னணி நடிகரின் படமும் நடித்து வருகிறார். மேலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

சாணி காகிதம் படத்தில் இயக்குனர் செல்வராகவனும் கீர்த்தி சுரேஷ் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் கீர்த்தி சுரேஷ் செல்வராகவனை பற்றி பல விஷயங்கள் கூறினார். அவர் ஒரு இயக்குனர் என்றாலும் அவரை ஒரு நடிகராக தான் பார்த்தேன் இயக்குனர் சொல்வதை மட்டும் செய்துவிட்டு சென்று விடுவார்.

அதுமட்டுமின்றி ஷூட்டிங் நடக்கும் இடத்தில் எதுவும் பேச மாட்டார். சாணி காகிதம் படம் நடிக்கும் போது தனுஷ் போன் செய்தார். செல்வராகவன் செமையாக நடிக்கிறார் எனக்கு தான் பக்கு பக்குன்னு இருக்குதுன்னு கூறினேன்.

அதற்கு தனுஷ் நானும் அவர் கிட்ட இருந்து தான் நடிப்பை கத்துக்கிட்டேன். அவர் வேறு மாதிரி நடித்துக் காட்டுவார். இரண்டு பேரும் ஒரு படத்தில் நடிப்பது மகிழ்ச்சி என கூறியதாக தெரிவித்துள்ளார்.

எனவே அண்ணாத்த படத்திற்கு பிறகு சாணி காகிதம் படத்தில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிக் காட்டி இருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு இந்த படத்திற்கு பிறகு, தமிழ் சினிமாவில் மேலும் மேலும் பட வாய்ப்புகளை குவிக்க போவதாகத் தெரிகிறது.

Trending News