ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

தனுஷ் என்னை இப்படி தான் செல்லமா அழைப்பார்.. பேரை கேட்டாலே சும்மா கிக்கா இருக்கு

பேட்டை படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மாளவிகா மோகன். அதற்குப் பின்னர் அடித்த ஜாக்பாட் தான் மாஸ்டர் திரைப்படம்.

மிக பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்த மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தார் மாளவிகா மோகன். இப்படி இருந்த சூழ்நிலையில் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவது போல் உங்களுடன் நடிப்பதற்கு ஆசைப்படுகிறேன் என்பதையும் சேர்த்துக் கூறினார்.

உடனே தனுஷ் விரைவில் அது நடக்கும் என்று தெரிவித்து இருந்தார். அதேபோல் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் தனது 43வது படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடித்து வருகிறார்.

முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து உள்ள சூழ்நிலையில் இந்த படப்பிடிப்பின் போது தனுசுடன் இருந்த நெருக்கமான நட்பை பற்றி பேசியுள்ளார் மாளவிகா மோகன். தனுஷ் என்னை மால்மோ என்று செல்லமாக அழைப்பார் என்று தெரிவித்துள்ளார்.

நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மாலு என்று அழைப்பார்கள் என்ற ரகசியத்தையும் உடைத்துள்ளார் மாளவிகா மோகனன். ரசிகர்கள் பெயரைக் கேட்டாலே சும்மா கிக்கா இருக்குது என்பது போன்ற கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

malavika-mohanan-cinemapettai
malavika-mohanan-cinemapettai

Trending News