வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வெள்ளக்காரங்களுக்கு கொலைகாரன், ஊர்க்காரங்களுக்கு துரோகி.. ரத்தம் தெறிக்க வெளிவந்த கேப்டன் உள்ள ட்ரெய்லர்

Captain Miller Trailer: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவர இருக்கிறது. சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதை தனுஷ் ஒரு புது போஸ்டர் மூலம் வெளியிட்டு இருந்தார். ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான டீசர் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதிலும் தனுஷின் கெட்டப் மற்றும் வெறித்தனமான நடிப்பு வேற லெவலில் இருந்தது.

Also read: பொங்கலுக்கு ரிலீஸ் ஆக போராடும் 4 படங்கள்… ஸ்டைலா கெத்தா லால் சலாம் உடன் போட்டி போடும் கேப்டன் மில்லர்

மேலும் ஜிவி பிரகாஷ் இசையில் படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. வீடியோவின் ஆரம்பமே அமர்களமாக இருக்கிறது.

வெள்ளக்காரங்களுக்கு நீ கொலைகாரன். ஊர்க்காரங்களுக்கு துரோகி. உண்மையிலேயே நீ யாரு? உனக்கு என்ன வேணும் என்பதை பொறுத்து நான் யாருங்கறது மாறும். நான் தான் டெவில். ஆனா யூ வில் கால் மீ கேப்டன் மில்லர் போன்ற வசனங்கள் தீப்பொறியாய் இருக்கிறது.

Also read: கேப்டன் மில்லர் விழாவில் தனுஷ் மானத்தை வாங்கிய ரசிகர்.. கூட்டத்தில் மன்னிப்பு கேட்க வைத்த தொகுப்பாளினி

மேலும் அருவி புகழ் அதிதி பாலன், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் ஆகியோரின் கதாபாத்திரங்கள் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படியாக ரத்தம் தெறிக்க தனுஷின் ருத்ர தாண்டவமாக வெளிவந்துள்ள கேப்டன் மில்லர் ட்ரெய்லர் அதிவேகத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Trending News