கர்ணன் படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் அவரது கதாபாத்திரம் என்ன மாதிரி அமையும் என ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உண்டாகி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
தனுஷ் மாஸ் படங்களில் நடிக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் படங்கள் மிகப்பெரிய வெற்றிகளை குவித்து வருவதை அவரே உணர்ந்தும் இருப்பார். இதனால் இனி மாரி போன்ற படங்களை அவரிடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.
தனுஷ் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் என்றால் அது கார்த்திக் நரேன் இயக்கும் D43 படம் தான். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். மேலும் ஜீவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
D43 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவடைந்து விட்டது. அதில் ஒரு பாடல் காட்சி உட்பட சில காட்சிகள் படமாக்கப்பட்டது செய்திகள் வெளியானது. இருந்தபோதிலும் தனுஷுக்கு D43 படத்தில் எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பது தெரியாமல் இருந்தது.
தற்போது அதற்கான விடையும் கிடைத்துள்ளது. தனுஷுக்கு D43 படத்தில் ஒரு பத்திரிக்கையாளர் கதாபாத்திரமாம். ஒரு கொலையின் பின்னணியை விசாரிக்கும் பத்திரிகையாளராகவும், அதன் உண்மை தன்மையை எப்படி வெளிக்கொண்டு வருகிறார் என்பதையும் திகில் கலந்த ஆக்ஷன் ஸ்டோரியாக சொல்ல உள்ளாராம் கார்த்திக் நரேன்.
இதனால் இந்த படத்தில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னாடி ஜூன் 18-ஆம் தேதி தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
![D43-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/05/d43-cinemapettai.jpg)