தனுஷ் தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று வெற்றி படங்கள் கொடுத்து தற்போது பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டுக்கு சென்றுள்ளார். முதல் படமே உலக அளவில் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த அவெஞ்சர்ஸ் கூட்டணி தான்.
இதனால் தனுஷ் ரசிகர்கள் தலைகால் புரியாத சந்தோஷத்தில் உள்ளனர். தற்போது அமெரிக்காவில் மையம் கொண்டுள்ள தனுஷ் விரைவில் த கிரே மேன்(the gray man) படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளாராம்.
இதற்கிடையில் த கிரே மேன் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்ற தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு வெறித்தனமான கதாபாத்திரம் என்கிறார்கள்.
தனுஷ் நடிப்பில் வெறித்தனமான வில்லத்தனமான கதாபாத்திரம் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற படங்களின் கதாபாத்திரங்கள் ஓரளவு வில்லத்தனத்தில் இருந்தது.
ஆனால் தற்போது ஹாலிவுட்டில் உருவாகும் த கிரே மேன் படத்தில் தனுஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். அதாவது ரயான் கோஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி ஆகிய இருவரும் சிபிஐ அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், அவர்களை கொலை செய்யத் துடிக்கும் கூட்டத்தின் தலைவனாக தனுஷ் நடிக்கிறாராம். மேலும் இந்த படம் த கிரே மேன் என்ற நாவலைத் தழுவி உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் ஹீரோவாக பார்க்கப்பட்ட தனுஷ் நீண்ட நாட்களுக்கு பிறகு வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதால் த கிரே மேன் படத்திற்கு ஹாலிவுட்டை விட தமிழ் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கம் ஆக்கியுள்ளது. மேலும் த கிரே மேன் படம் நேரடியாக நெட்ப்ளிக்ஸ் என்ற ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது கூடுதல் தகவல்.