வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2025

வட்டி குட்டி மேல குட்டி போட்டாலும் டபாய்க்கும் தனுஷ்.. ஜீரணிக்க முடியாமல் லலித் படும் பாடு

விஜய்யை வைத்து மாஸ்டர், லியோ போன்ற படங்களை தயாரித்தவர் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனர் லலித். இப்பொழுது இவர் விக்னேஷ் சிவனின் LIK படத்தை தயாரித்து வருகிறார். கூடிய விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது

2023 லியோ பட சூட்டிங் காலகட்டத்தில் தனுஷை வைத்து ஒரு படம் பண்ணதிட்டம் போட்டார் லலித். அந்த நேரத்திலேயே தனுசுக்கும் 14 கோடிகள் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். அதன் பின் H.vinoth, மற்றும் மாரி செல்வராஜ் போன்றவர்கள் கூட்டணியில் ஒரு படம் பண்ணுவதாக இருந்தார்கள்.

ஆனால் விஜய்யின் ஜன நாயகன் படம் கைக்கு வந்ததால் வினோத் அங்கே சென்றுவிட்டார். அதன் பின் லலித் மாரி செல்வராஜை தனுஷிடம் அனுப்பியும் வேலைக்காகவில்லை. தொடர்ந்து தனுஷ் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறார். இப்பொழுது கொடுத்த அட்வான்ஸ் 14 கோடிகள் வட்டி போட்டு 30 கோடிக்கு மேலாகி விட்டதாம்.

இருந்த போதிலும் தனுஷ் பல தயாரிப்பாளர்களுக்கு கால் சீட் கொடுத்து வருகிறார் ஆனால் தொடர்ந்து லலித்திற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார். இதனால் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் லலித் தவியாய் தவித்து வருகிறார்.

ஒரு பக்கம் தனுஷ், டான் பிக்சர்ஸ், மதுரை அன்பு, வேல்ஸ் நிறுவனம் போன்றவர்களுக்கு கால் சீட் கொடுத்து வருகிறார். இதனால் அவரை போல பெரிய ஹீரோவை நெருக்க முடியாமல் தொடர்ந்து வட்டி கட்டும் நிலைமையில் இருக்கிறார் லலித். 2026 வரை தனுஷின் கால் சீட் பிசியாக இருக்கிறது.

Trending News