புதன்கிழமை, ஜனவரி 22, 2025

கேரவனில் தேம்பித் தேம்பி அழுத தனுஷ்! தீ போல் பரவும் வீடியோ!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் தனுஷ். என்னதான் இவர் பெரிய வீட்டு மருமகனாக இருந்தாலும் அந்த தலை கணத்தை தனது தலையில் ஏற்றாமல் இருப்பதால் தான் தற்போது இவரால் கோலிவுட்டை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் என உலக அளவில் பிரபலம் அடைய முடிந்தது.

அதே போல் தனுஷின் ஒவ்வொரு படமும் தனித்துவம் பெற்று இருப்பதால், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கர்ணன்’ திரைப்படம் விரைவில் திரையிடப்பட உள்ளது என்பதும், அந்த படத்திற்காக ரசிகர்கள் பலர் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பதும் நாம் அறிந்ததே.

இந்த நிலையில் தனுஷ் கேரவனில் தேம்பித் தேம்பி அழுததாக பேசியிருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

அதாவது தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் தனுஷ், ஒருகாலத்தில் படாத அவமானமே கிடையாது என்று வீடியோ ஒன்றில் தெரிவித்திருக்கிறார். மேலும் அந்த வீடியோவில் தன்னை அவமானப் படுத்தாத ஆளே கிடையாது என்று  உருக்கமாக பேசியிருக்கிறார் தனுஷ்.

மேலும் ‘காதல் கொண்டேன்’ படத்தின் சூட்டிங் ஆந்திராவில் எடுக்கப்பட்டபோது, அங்குள்ள ஒருவர் இந்த படத்திற்கு யார் ஹீரோ என்று தனுஷிடம் கேட்டாராம். அதற்கு தனுஷ் சுதீப்பை (படத்தின் இரண்டாவது கதாநாயகன்) காட்டி இவர்தான் என்று கூறினாராம். அந்த ரசிகரும் சுதீப்புடன் கை கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டாராம்.

பிறகு, அசிஸ்டன்ட் டைரக்டர் தனுஷ் தான் ஹீரோ என்று அந்த ரசிகரிடம் கூற, அங்கிருந்த மொட்டை கூட்டமும் தனுஷை பார்த்து கேலி செய்து சிரித்தார்களாம். அதுமட்டுமில்லாமல், இந்த ஆட்டோக்காரன் ஹீரோ, அந்த ரிக்ஷாகாரன் ஹீரோ என்று கேலி செய்ய ஆரம்பித்து விட்டார்களாம்.

dhanush-cinemapettai
dhanush-cinemapettai

இதைப்பார்த்த  18 வயசு தனுஷுக்கு இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாமல், கேரவனுக்குள் சென்று தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து  விட்டாராம். இந்த தகவல்களை தற்போது தனுஷ் வீடியோ ஒன்றில் பதிவிட்டு இருப்பதோடு, ஒருவரின் உருவத்தை பார்த்து கேலி செய்யக் கூடாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில்  காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

Trending News