வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

தனுஷ் வேணாம்.. மருமகன்னு கூட பாக்கலியே.. அந்த சூப்பர் ஹிட் படத்தின் 2 ஆம் பாகத்திற்காக ரஜினி எடுத்த முடிவு!

ஜெயிலர் 2 படம் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில் இதில் தனுஷ் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி வேறு முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கூலி. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜூனா, செளபின் ஷாஹிர், பகத் பாசில், ரெபா மோனிகா, ஜான், உபேந்திரா, நாகார்ஜூனா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டை காட்சி அமைத்துள்ளனர். இப்படத்தை சன்பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினார். இதையடுத்து சில நாட்கள் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த ரஜினி, இன்று முதல் கூலி பட ஷூட்டிங் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியானது.

தற்போது ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு கூலி பட ஷுட்டிங் நடந்து வரும் நிலையில் ரஜினி இதில் கலந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகிறது. சமீபத்தில் ரஜினி நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான வேட்டையன் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், ரூ.100 வசூலை எட்ட நாட்கள் ஆனதாக ரசிகர்கள் விமர்சித்தனர். இப்படம் ஆவ்ரேஜ்ஜாக போனதாக நெட்டிசன்கள் கூறி வரும் நிலையில் லோகேஷ்- ரஜினி கூட்டணியில் பான் இந்தியா படமாக உருவாகும் கூலி படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

ஜெயிலர் 2 படம்

இந்த நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். இப்படம் ரூ.200 கோடியில் எடுக்கப்பட்டு ரூ.650 கோடிக்கு மேல் வசூல் குவித்து தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட்டானது. இப்படம் ஒரு பென்ச் மார்க்காக இருக்கும் நிலையில், இப்படத்தின் வசூலை மற்ற படங்கள் இன்னும் முறியடிக்கவில்லை.

எனவே சூப்பர் ஹிட்டடித்த ஜெயிலர் படத்தின் 2 வது பாகம் எப்போது தயாராகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அதன்படி ஜெயிலர் 2 படம் விரைவில் தொடங்க வாய்ப்பிருப்பதாகவும், இதில், தனுஷ் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில் ரஜினி அதற்கு சம்மதிக்க மாட்டார் என கூறப்பட்டது.

தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதியின் 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து இருவரும் பிரிவதாக அறிவித்த நிலையில், தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. பிள்ளைகளுக்காக இருவரும் மீண்டும் இணையலாம் என சினிமா விமர்சகர்கள் கூறினாலும் சேர்ந்து வாழ்வது என்பது அது இருவரின் கையில் தான் உள்ளது.

ஜெயிலர் 2- ல் தனுஷ் நடிப்பாரா? ரஜினியின் முடிவு என்ன?

இந்த நிலையில் ஏற்கனவே வீட்டில் பிரச்சனை புயல் வீசி வரும் நிலையில், ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து தனுஷ் நடிப்பதாகவும், வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது வதந்தி என தகவல் வெளியாகிறது. குறிப்பாக ரஜினி இன்னும் லால் சலாம் படம் உள்ளிட்ட ஒருசில படங்களில்தான் கெஸ்ட் ரோலில் பண்ணியுள்ளர்.

அதேபோல் அவர் மற்ற ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கவும் மாட்டார். அது மருமகன் தனுஷாகவே இருந்தாலும் ரஜினி இன்னும் சூப்பர் ஸ்டார் என்பதால் அவர் மற்ற ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பில்லை; அவர் படத்தில் தனுசை நடிக்க வைக்க யாரும் அவரிடம் அனுமதி கேட்கவும் முடியாது; அதனால் அவரேதான் ஜெயிலர் 2 நடிப்பார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Trending News