வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

இந்திய அளவில் டாப் மாடல் கார்களை வாங்கி குவிக்கும் தனுஷ்.. ஒவ்வொன்னும் இத்தனை கோடியா

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என திரையுலகில் கலக்கி வரும் தனுஷ், தற்போது வாத்தி என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக உள்ளார்.

சில பிரபலங்களுக்கு கார் மீது அதீத பிரியம் இருக்கும். அதேபோல் சினிமா மீது நடிகர் தனுஷுக்கு எந்தளவுக்கு ஆர்வம் இருக்கிறதோ அந்தளவுக்கு கார்கள் மீதும் ஆர்வம் அதிகம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் பல கார்களை வாங்கி குவிக்கிறார்.

தனுஷ் சொகுசு கார்கள் மற்றும் கவர்ச்சியான கார்களை சேகரிக்கும் தன்மை கொண்டவர். தனுஷின் கார்களிலே விலை உயர்ந்த கார் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட். இந்த காரின் விலை 7 கோடி ஆகும். தமிழகத்தில் முதன் முதலில் ரோல்ஸ் ராய்ஸ் காரை புக் செய்து வாங்கியது இயக்குனர் ஷங்கர் தான். அதன்பிறகு விஜய், தனுஷ், ஏ ஆர் ரகுமான் ஆகியோர் ரோல்ஸ் ராய்ஸ் காரை வைத்துள்ளனர்.

பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் W12 மாடலின் விலை சுமார் 3.40 கோடி. டோலிவுட்டில் பென்ட்லி ஃப்ளையிங் ஸ்பர் வைத்திருக்கும் சில நடிகர்களில் தனுஷும் ஒருவர். அதைத் தொடர்ந்து ஜூலை 2017 இல் அறிமுகமான ஆடி ஏ8 கார் தனுஷிடம் உள்ளது. ஆடி ஏ8 காரின் விலை சுமார் 1.60 கோடி.

Dhanush-Cinemapettai.
Dhanush-Cinemapettai.

தனுஷ் படப்பிடிப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது பெரும்பாலும் ஆடி ஏ8 பயன்படுத்துவார். தனுஷ் காரிலேயே மிகக் விலை குறைந்த கார் ஜாகுவார் XE ஆகும். இந்த காரின் விலை 45 லட்சம். இத்தனை கார்கள் இருந்தும், தற்போது இந்தியாவில் அறிமுகமாகும் கார்களை வாங்குவதற்கு தனுஷ் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.

Trending News