ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

தெலுங்கு சினிமாவில் கால் பதிக்கும் தனுஷ்.. அதிகாரபூர்வ அறிவிப்பு, ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் மூலம் தனுஷ் தனது சினிமா வாழ்க்கையின்  உச்சத்தை தொட்டு விட்டார் என்று தான் கூற வேண்டும். இதனை அடுத்து கார்த்திக் நரேன், மாரி செல்வராஜ், ராம் குமார், செல்வராகவன் என்று அடுக்கடுக்காக பல படங்களில் கமிட்டாகி உள்ளார் தனுஷ்.

அடுத்த 3 வருடங்களுக்கு தனுசை குத்தகை எடுத்து விட்டனர். இப்படி பிசியான கால கட்டத்தில் தெலுங்கு படத்திலும் கமிட்டாகியுள்ளார் தனுஷ்.

இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் களமிறங்க உள்ளாராம். இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகிறார் தனுஷ்.

அதுமட்டுமில்லாமல் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாக உள்ளதாம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளரான வெங்கடேஸ்வரா சினிமாஸ் இன்று வெளியிட்டுள்ளது.

dhanush
dhanush

இதனை பார்த்து தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 19 மொழிகளில், 120 நாடுகளில், 200 மில்லியன் சப்ஸ்கிரைபர் உடன் நெட்பிலிக்ஸ்-இல் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது ஜகமே தந்திரம். தனுஷ் ரசிகர்களுக்கு இன்று டபுள் ட்ரீட் தான்.

Trending News