திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

சரக்கு தீர்ந்த நிலையில் நிராயுதபாணியாக நிற்கும் இயக்குனர்.. ஆள விடு என எஸ்கேப் ஆன தனுஷ்

Actor Dhanush: தனுஷ் நடிப்பில் இப்போது கேப்டன் மில்லர் பிரம்மாண்டமாக உருவாகி கொண்டிருக்கிறது. இதையடுத்து பாலிவுட்டில் ஒரு படம், தன்னுடைய ஐம்பதாவது படம் என அவர் அடுத்தடுத்த ப்ராஜெக்டுகளில் பிஸியாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இவரை நம்பி இருந்த இயக்குனரை டீலில் விட்டுவிட்டு தனுஷ் எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

அதாவது அண்மைக்காலமாகவே செல்வராகவனுக்கு நேரமே சரியில்லை. ஒரு காலத்தில் இவருடைய படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் இப்போது அப்படி கிடையாது. சமீபமாக அவர் இயக்கும் படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

Also read: மற்ற பிரபலங்களின் படங்களுக்கு பாடி கொடுத்த 5 நடிகர், நடிகைகள்.. கார்த்தியை தூக்கிவிட்டு அழகு பார்த்த தனுஷ்

அதனால் வாய்ப்பு இல்லாமல் இருந்த அவருக்காக தனுஷ் நானே வருவேன் படத்தை நடித்துக் கொடுத்தார். அதிலும் இந்த படம் சரியாக போகவில்லை என்றால் அடுத்த முறை எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என்ற நிபந்தனையோடு தான் நடித்துக் கொடுத்தாராம். ஆனால் யாருடைய கெட்ட நேரமோ அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.

இதனால் நொந்து போன செல்வராகவன் அடிக்கடி தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் விரக்தியான பதிவுகளை போட்டு வருகிறார். இதுவே அவர் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறார் என்பதை தெளிவாக காட்டியது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கலாம் என செல்வராகவன் திட்டம் போட்டு இருக்கிறார்.

Also read: மகளுக்காக ரஜினி இறங்கி போய் பிரித்து விட்ட நடிகை.. மீண்டும் பழிவாங்க ஜோடி சேர்ந்த தனுஷ்

அதைத்தொடர்ந்து தனுஷிடம் இது பற்றி கேட்டிருக்கிறார். ஆனால் ஏற்கனவே பட்டது போதும் என்ற நிலையில் ஆள விடு சாமி என்று அவர் எஸ்கேப் ஆகிவிட்டாராம். இப்படி நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்ற நிலையில் செல்வராகவன் கடும் அப்செட்டில் இருக்கிறாராம்.

ஆனாலும் இப்படத்தை எடுத்தே தீர வேண்டும் என்ற முடிவில் அவர் இருக்கிறார். அதற்கு தயாரிப்பாளர்கள் தான் ரெடியாக இல்லை. அந்த வகையில் சரக்கு முழுவதும் தீர்ந்து போன நிலையில் தற்போது நிராயுதபாணியாக இருக்கும் செல்வராகவனின் நிலையை பற்றிய பேச்சு தான் இப்போது காற்றுவாக்கில் பரவிக் கொண்டிருக்கிறது.

Also read: மாமன்னன் படம் எப்படி இருக்கு.? முதல் விமர்சனத்தை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்திய தனுஷ்

Trending News