கோலிவுட் முதல் பாலிவுட், ஹாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் தற்போது முன்னணி நடிகராக இந்திய சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது தயாரிப்பில் பல ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள படங்களிலும் வெளியானது.
சமீபகாலமாகவே தனுஷ் பிஸ்னஸ் எல்லம் டவுன் ஆகி வருகிறது. அவர் வுண்டர்பார் ப்ரொடக்ஷன் கம்பெனியை மூடி விட்டார். தொடக்கத்தில் அவருடைய வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நல்ல லாபம் ஈட்டி நிலையில், சமீபத்தில் இவரது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் படு தோல்வியை சந்தித்திருக்கிறது.
Also Read : மத்தளம் போல் அடிமேல் அடிவாங்கும் தனுஷ்.. ரகசியமாய் வெற்றிமாறனுக்கு போட்ட போன் கால்
ஆனால் சிவகார்த்திகேயன் காட்டில் இப்ப நல்ல மழை. நடிப்பிலும் தயாரிப்பிலும் கடும் போட்டியாக மாறியிருக்கும் சிவகார்த்திகேயன், தனுசுக்கு மட்டுமல்ல ஹீரோக்கள் அனைவரையும் ஓரங்கட்டி, வசூலில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த கனா, அதைத்தொடர்ந்து சீரியல் நடிகரும் பிக்பாஸ் பிரபலமான ரியோ ராஜ் ஹீரோவாக நடித்த நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற சிறிய பட்ஜெட் படங்களை தயாரித்து நல்ல லாபம் பார்த்தார். நம்ம வீட்டு பிள்ளை ஆரம்பித்து டாக்டர், டான் என வசூலில் 100 கோடியை குவித்து கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்.
Also Read : மறக்கமுடியாத கதாபாத்திரத்தை தவறவிட்ட 5 நடிகர்கள்.. தனுஷின் வெற்றி படத்தை இழந்த சிம்பு
தற்போது சிவகார்த்திகேயனின் அயலான், மாவீரன் என எல்லா படங்களுக்கும் நல்ல ஹைட் இருந்து வருகிறது. மேலும் இவரது அயலான், பிரின்ஸ் படங்களும் 100 கோடி கலெக்ஷன் என்று சொல்லியிருக்கிறார்கள். சினிமாவின் அனிருத், சிவகார்த்திகேயன் இருவரையும் தூக்கி விட்ட தனுஷ், தற்சமயம் வியாபார ரீதியாக படுதோல்வியை சந்தித்து கொண்டு இருக்கின்றார்.
அவர் வளர்த்து விட்ட சிவகார்த்திகேயன் அவருக்கே போட்டியாக மாறி ஹிட் கொடுக்கும் படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தனுஷ் அவருடைய வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடும் நிலைமைக்கு வந்திருக்கும் விஷயத்தை தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக பேசிக்கொண்டிருந்தனர்.
Also Read : பெரும் பிரச்சனை பண்ண போகும் வெற்றிமாறன்.. வடசென்னையால் இடியாப்பச் சிக்கலில் தனுஷ்