வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

மறுபடியுமா! வேண்டாம் தனுஷ் விட்ருங்க.. இணையத்தில் கதறும் ரசிகர்கள்

தனுஷ் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து தனுஷ் கைவசம் ஏகப்பட்ட படங்கள் வரிசையில் நிற்கின்றன. அதில் அவரது அண்ணன் செல்வராகவனும் நானே வருவேன் படமும் ஒன்று.

ஆனால் தற்போது செல்வராகவன் படம் இயக்குவதை விட நடிப்பில் பிஸியாக இருப்பதால் நானே வருவேன் படம் எப்போது தொடங்கும் என்பதே தெரியாத நிலையில் இருக்கிறது. இருந்தாலும் தனுஷ் அது நடக்கும்போது நடக்கட்டும் என அந்த படத்தின் கால்சீட்டை அடுத்தடுத்த படங்களுக்கு கொடுத்து வருகிறார்.

மேலும் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நேரடிப் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்தவகையில் இரண்டு படங்களில் ஏற்கனவே கமிட் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் தனுஷ் நடித்த பாலிவுட் படமான அற்றங்கி படமும் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தனுஷ் ஒரு இளம் இயக்குனருடன் புதிய படமொன்றில் கூட்டணி சேர உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ராக்கி என்ற படத்தை இயக்கியுள்ள அருண் மாதேஸ்வரன் என்பவர்தான் தனுஷின் அடுத்த படத்தை இயக்க உள்ளாராம்.

அதில் ரசிகர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் அவர் கையில் எடுத்துள்ள கதை தான் பிரச்சனை என்கிறார்கள். இதில் தனுஷ் 1950 கால கட்டங்களில் வரும் கேங்ஸ்டர் போல் நடிக்க உள்ளாராம். ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் கேங்ஸ்டராக நடித்த ஜகமே தந்திரம் படத்தின் கதி என்ன ஆனது என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதானே.

இருந்தாலும் இயக்குனர் மீதும் கதையின் மீதும் நம்பிக்கை வைத்து தைரியமாக இந்த முடிவை எடுத்துள்ளாராம் தனுஷ். உங்களுக்கு நடிக்க தைரியம் இருக்கு ஆனா எங்களுக்கு பார்க்க தைரியம் இல்லை என்கிறார்கள் ரசிகர்கள்.

Trending News