வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

நீங்க பண்ணது எல்லாம் மறந்துட்டீங்களா? அப்படியே கல்யாண கேசட்ட free-யா youtube-ல போடுங்களேன்

கோலிவுட்டில் தற்போது ஹாட் டொபிக் ஆக இருப்பது தனுஷ் நயன்தாரா பிரச்சனை தான். உயிர் நண்பர்களாக இருந்த இவர்கள், தற்போது ஜென்ம விரோதிகளை போல நடந்துகொள்கிறார்கள். 3 செகண்ட்-க்கு 10 கோடி கேக்குறது எல்லாம் கொஞ்சம் கூட நியாயம் இல்லை என்று கோவமாக பதிவு போட்ட நயன்தாரா, ரசிகர்களாக தனுஷுக்கு எதிராக திருப்பி விட வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஒரு சில வார்த்தைகளை பயன்படுத்தினார்கள்.

முக்கியமாக தனுஷ் ஒரு saddist-என்ற அளவுக்கு பேசி இருந்தார் நயன்தாரா. அதை நேரடியாக சொல்லாமல், ஜேர்மன் வார்த்தையை பயன்படுத்தி சொன்னார். இந்த நிலையில், தனக்கு ஆதரவாக குரல்கள் வரும் என்று எதிர்பார்த்தார். அது வந்தாலும், பலர் தற்போது தனுஷுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

நீங்க பண்ணது எல்லாம் மறந்துட்டீங்களா?

5 செகண்ட் விளமபரத்துக்கு 5 கோடி வாங்கினீங்களே நயன், அப்போ இதெல்லாம் அநியாயமா தெரியலையா? என்று பலர் கேட்க ஆரம்பித்து விட்டனர். அதுமட்டுமின்றி, நீங்கள் எதற்க்காக உங்கள கல்யாண் படத்தை netflix-க்கு கொடுத்தீர்கள், பணத்திற்காக தானே. ரசிகர்களுக்காக என்றால் அதை free-யாக youtube-களுக்கு கொடுத்திருக்கலாமே?

50 கோடி-க்கு நீங்கள் டீல் பேசி விற்பனை செய்துள்ளீர்கள், அதில் உங்கள் காதல் காவியம் உருவாக தலையை அடமானம் வைத்த தனுஷுக்கு ஒரு 10 கோடி கொடுப்பதில், என்ன? உண்மையை சொல்லப்போனால், 6 கோடியில், முடியவேண்டிய படம் உங்கள் தெய்வீக காதலால் எக்ஸ்ட்ரா 10 கோடி-க்கு செலவு ஆனது.

அப்படி இருக்கும்போது, அவருக்கு இதையெல்லாம் பார்த்தால் கோவம் வர தானே செய்யும். தனுஷாள் வாழ்ந்தவர்கள், பலர் இருக்கிறார்கள். உங்களால் உருவான, வளர்ந்த, சினிமாவில் வெற்றியாளர்களாக இருக்கும் ஒருவரை உங்களால் கை காட்ட முடியுமா?

அவருக்கு சினிமா பின்னணி இருந்தாலும், யார் பெயரையும் பயன்படுத்தாமல் மேல் வந்தவர். அதிகமான ட்ரோல்-களுக்கு பிறகு, இன்று உச்சத்தில் இருக்கும் வேளையில், பலரை தன் படங்கள் மூலம் மக்களுக்கு அறிமுகம் செய்கிறார்.

நீங்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தை தாண்டி, உங்கள் வளர்ச்சியை தாண்டி மக்களுக்காக அல்லது ரசிகர்களுக்காக வேறு என்ன செய்துள்ளீர்கள் என்று தனுஷ் ஆதரவாளர்கள், சரமாரியாக நயன்தாராவை கேள்வி கேட்டு வருகின்றனர்.

Trending News