திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

நயன்தாராவுடன் நெட்ஃபிளிக்ஸுக்கும் ஏற்பட்ட தலைவலி.. தனுஷ் கொடுக்கும் நெருக்கடி

Dhanush : சமீபத்தில் நயன்தாரா மற்றும் தனுஷ் இடையே ஆன பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. அதாவது நயன்தாரா தனது திருமண ஆவணப்படத்தை நெட்ஃபிளிக்ஸுக்கு விற்று இருந்தார். இதில் நயன்தாரா படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருந்தது.

அதிலும் குறிப்பாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் காதலிக்க காரணமாக இருந்த நானும் ரவுடிதான் படத்திலிருந்து சில காட்சிகள் உபயோகப்படுத்தி இருந்தார்கள். இதற்காக தனுஷிடம் அனுமதி கேட்டபோது அவர் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டதாக நயன்தாரா அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார்.

மூன்று நிமிட காட்சிக்கு 10 கோடியா என மூன்று பக்கத்திற்கு அறிக்கை வெளியிட்டார். ஒருபுறம் தனுஷுக்கு ஆதரவாகவும், மற்றொருபுறம் நயன்தாராவுக்கு ஆதரவாகவும் பலரும் பேசி வந்தனர். சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாரா ஆவணப்படம் வெளியிடப்பட்டது.

நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்த தனுஷ்

இதில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளும் பயன்படுத்திருந்தது. மேலும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்ற படங்களின் தயாரிப்பாளருக்கு நயன்தாரா நன்றி தெரிவித்திருந்தார். அதில் தனுஷ் பெயர் மட்டும் இடம்பெறாமல் இருந்தது.

இந்நிலையில் தனுஷ் தற்போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதாவது தனது அனுமதி இன்றி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண படத்தில் தன்னுடைய நானும் ரௌடி தான் படத்தின் காட்சிகள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

இதை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டு இருக்கின்றனர். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனுஷ் இந்த வழக்கை தொடர்ந்துள்ள நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்ற உத்தரவிட்டுள்ளனர்.

Trending News